நேசமே சுவாசமாய் - 45

158 12 7
                                    

அதிர்ச்சி

பகுதி - 45

கலையின் கடந்த காலத்தை கேட்தே தாங்க இயலாததாக இருந்தது என்றால்,
அதன் பின் நந்தனின் தாய் ஏற்படுத்திய காயங்களை கேட்ட பிறகோ.. துடிதுடித்தவளாய் இப்பொழுது , தன் கணவனுக்காக.. அவள் மீது கொண்ட கோபமும்.. கத்தாமல் , மெல்லிய குரலிலேயே , நக்கலாக.. அவள் சினத்தை மறைக்காமல் காண்பித்து கூறு போடும் தோழியிடம் , எதை கூறினால் தன்னை புரிந்துக கொள்வாள்.. என்று கீர்த்தி தவிக்க தொடங்கினாள் .

ஆனால் , கலையோ , அவள் ஏற்படுத்திய காயத்திற்காக.. எங்கே தன்னை மறந்து கடுமையைக் காட்டிவிடுவோமோ.. என்று அஞ்சியே ., ஒதுங்கி இருந்தாள். இங்கு அவள் வந்தும் கடைப்பிடித்தவளாய் இருந்தாள் . அதை கீர்த்தியும் எதிர்ப்பார்த்தது தான் என்றாலும் , சோகப் பதுமையாக.. அனைத்திலும் காணப்பட.. தன் துயரை தோழியோடு , பகிர்ந்து.. அவளுடைய தவறையும் சுட்டிக்காட்ட நினைத்தவளாய்.. கலை பொங்கி விட்டாள் எனலாம் . 

" ம்.. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா.. வாய்ப்பு நமக்கு ஒரே ஒரு தடவைதான் சில சமயங்களில் கிடைக்கும்.. அதுக்கு அப்புறம் வரவே செய்யாது.‌ என் அப்பா அம்மாவை.. சஞ்சய் பார்த்து இருக்கலாம்.. அவருக்கும் அவர்களை தெரிந்திருக்கலாம்.. ஆனா, இப்ப வரை.. என் கணவனா.. என்னால அவங்க முன்னாடி போய் நிறுத்தவே முடியலை கீர்த்தி..

நான் செஞ்ச தப்பை இதுவரைக்கும் சரி பண்ண முடியாமல் பட்றபாடு தெரியுமா உனக்கு.. ஒரு நிமிஷம்.. என் மனசோட தடுமாற்றம் , எத்தனை பேரை காயப்படுத்தியிருக்கு... நான் சஞ்சய்க்கும் தண்டனை தான் கொடுத்திருந்தேன்‌. தேவ்வோடு.. அவர் இருக்க வேண்டிய நொடிகளை எல்லாத்தையும் ஒன்னுமில்லாம ஆகினேன்.. பெத்தவங்களுக்கும் நம்பிக்கைய கொன்னுட்டேன்.. என் நந்துவுக்கு வலிய தவிர.. வேறு எதையுமே கொடுத்தது இல்லை..", என்று முழு வேதனையை.. தாங்கியவளாய்.. ஏனோ, கலைக்கும் சரி நந்தனுக்கும் சரி.. கீர்த்தியின் வார்த்தைகள் இருவரையும் சிதற செய்திருந்தது என்றே கூற வேண்டும் . 

நேசமே சுவாசமாய் Where stories live. Discover now