நேசமே சுவாசமாய் - 5

332 18 3
                                    

பகுதி - 5

இருநூற்றி ஐம்பது ஏக்கர் பரப்பளவில் இயங்கி வரும் ஷர்மா மோட்டார்ஸ் தொழிற்சாலையில்.. கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் யூனிட்டுகள் இயங்கிக் கொண்டிருக்க.. பூனேவில் மட்டும் பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இயங்கி வருகிறார்கள் . இங்கு தயாரிக்கப்படும் இரும்பு உதிரி பாகங்கள், நூற்றி எண்பதிற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு, ஏற்றுமதி செய்து கொண்டிருக்க.. எண்பது ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமாக இயங்கி வந்த ஷர்மா இன்டஸ்டீரீஸ்.. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெரும் சரிவை கண்ட போது.. நிகிலின் தலையீட்டால் மட்டுமே.. மேம்படுத்தப்பட்டது..

இன்று, முன்பு இருந்ததை விடவும் மூன்று மடங்குகளாக பெருக்கினான் என்றால்.. முழுமையாக இந்த ஓர் ஆண்டில் , நரேனின் நிர்வாகத் திறமையால்.. மேலும் ஒரு மடங்கு உயர்த்தவே செய்திருந்தான் ..  

தன் ஆளுமை குறையாமல் எப்பொழுதும் போல்.. தொழிற்சாலையை ஒருமுறை சுற்றி வந்தவன்.. தன் அலுவலக அறைக்குள் நுழைந்து.. வேலையில் இறங்கியவனாய் செயல் பட.. செயல்பட நினைக்க மட்டுமே முடிந்தது..

" தியா பேபி.." என்ற அழுத்தமான கலையின் குரலே.. தடுத்து வந்த நிலையில்.. தன் உதவி ஆளனை அழைத்தவன்..

 "கேன்ஸல்.. ஆல் த மீட்டிங்ஸ் ஃபார் ஹாஃபனார்.." என்று கூறி நான் அழைக்கும் வரை நீயும் வராதே.. என்று அனுப்பியவன்.. அப்படியே தன் டையை தளர்த்தி சாய்வாய் நாற்காலியில் சாய்ந்து, தன் விழிகளை மூடிக் கொண்டான் . அலைபேசியின் வாயிலாக.. தன் நடத்தையை கலை பார்த்துவிட்டாள் என்பதிலேயே தலையை தாங்கிப் பிடித்தவனாய் .

கண்டிப்பாக , கலை இதை பற்றி எப்பொழுதும் கேட்கவும் மாட்டாள்.. அதற்காக.. தன்னிடம் பேசாமலும் இருக்க மாட்டாள் . கணவன் மனைவியின் பெர்ஸ்னல் ஸ்பேசிற்குள் நுழையும் அளவிற்கு உரிமையே இருந்தாலும், நாகரீகம் கருதி விலகியே இருப்பாள் .. ஆனால் மனதளவில் தவறு செய்துவிட்டதாக நினைத்து நிச்சயமாக மருகுவாள் என்ற விஷயமே அவள் ஹிட்லரை நிலைக்கொள்ளாமல் தடுமாறச் செய்து கொண்டிருக்கிறது.. 

நேசமே சுவாசமாய் Where stories live. Discover now