நேசமே சுவாசமாய் - 30

222 15 3
                                    

சஞ்சயின் மோகம்..
நந்தனின் கோபம்

பகுதி - 30

கலைக்கோ.. கணவன் தன் தாக்கத்தை தீர்த்துக் கொள்வதற்கு விளக்கியதில்.. செவ்வானமாய் சிவந்து முகத்தையும் ஏறிடும் தைரியம் அற்றவளாய்.. இருக்க மேலும், அவன் அவள் காதிற்குள் கிசுகிசுத்து.. செயல்படுத்துவதற்கு முன்பாக வாய் வழி விளக்கம் கொடுக்க.. " ச்சீ..", என்று வெட்கத்தால் விலகி ஓடவே தோன்றியது.அதற்கு, அவன் அனுமதி வேண்டுமே.. " காதல் என்றால் கிலோ என்ன விலைன்னு கேட்க கூடியவன்..", என்று சுமியின் கேலி பேச்சு நினைவுக்கு.. " இவருக்கா.." என்று தன்னை அறியாமல் வாய்விட.. 

" ஓய்.. நான் என்ன கேக்குறேன்.. நீ என்ன சொல்ற..", என்று அவளின் சம்மதத்தை வேண்டியிருப்பவனுக்கு மனைவியின் பதில் புரியவில்லை.

சுமி முன்பொரு முறை சொல்லியதை சொன்னவள்.. " இப்ப நீங்க பேசுறத.. அவ கேட்டு இருக்கணும்..", என்று முனங்க..

மேலும் இறுக்கிக் கொண்டவனாய் , "நான் ஏன்டீ அவட்ட.. என் தேவையை சொல்லப் போறேன்..", என்றவன் பதிலில்.. பட்டென்று ஒன்று போட்டவளை அப்படியே அணைத்து தன் தேடலை துவங்க.. நாணத்தில் சிலிர்த்து இருந்தவளிடம்..

" நீ இப்படியே ரியாக்ட் பண்ணினா.. எதுக்கும் நான் பொறுப்பு அல்ல..", என்று அவளுடைய வளையோசையும்.. அவனின் மென்குரல் சீண்டலும்.. அதற்கு சிணுங்கலான சிரிப்பொழியுமே.. அந்த அறை முழுவதும் நிறைந்திருந்தது.

நேஹாவின் வருகையால், முகம் சுணங்கியிருந்த மீராவை பார்த்ததில் இருந்தே.. நரேனுக்கு ஏதோபோல் இருக்க.. பிடிவாதமாக அவனே கல்லூரி கொண்டு செல்வதை வழக்கமாக வைத்திருந்தான் . நள்ளிரவை தாண்டி , தன் தங்களின் அறைக்கு உள்ளே நுழைய.. தியா அவளது படுக்கையில் உறங்கியிருந்தாள்.. விழிகளால் மனைவியை தேடினாலோ, புத்தகத்தின் மீதே தலையை கவிழ்ந்து வைத்து உறங்கியிருந்தாள் . கரத்தில் எழுதிய நிலையிலேயே பேனா இருக்க.. மெல்ல அவளை நெருங்கியவன்.‌‌. தொய்ந்திருந்த பேனாவை மெல்ல எடுக்க முயல, 

நேசமே சுவாசமாய் Where stories live. Discover now