நேசமே சுவாசமாய் - 44

160 12 2
                                    

அழகிய நட்பு

பகுதி - 44

கலை,  வெடித்து சிதறிய அழுகையை காண முடியாதவனாய் துடித்தாலும்.. அவளை தோள் வளைவில் கொண்டு வந்து ஆறுதல் அளித்தாலும்.. அதற்கு மேல் நெருங்க விடாமல்.. உரிமையை நிலை நாட்டவிடாமல் பிடிவாதமாய் மறுக்கும் செயலால்.. தவித்துப் போனான் என்றால் சரியாக இருக்கும்.

மெல்ல அவளே தெளிந்து நிமிர்ந்தவள்.. "எனக்கு ஒரே நாள்ல ஷாக் மேல ஷாக் கொடுக்காதடா.. தாங்கிக் முடியலை.. நீ இனிமேல் என்னை பார்க்க வராதேன்னு சொல்ற தைரியம் இல்லாம தான்.. சுயநலமா.. உன்னை விலகி வச்சு காயப்படுத்தீட்டு இருக்கேன்.. இதுக்கு மேலையும்.. வார்த்தையால தண்டிக்காத நந்து.. செத்தா கூட.. என்னால நிம்மதியா.. இருக்க முடியாது.. எல்லோரும் , உயிரோட வச்சிட்டு.. என்னையும் என் பையனையும் அந்த ஆண்டவன்.. கொண்டு போயிருக்கலாம்.. எல்லோருமே , நிம்மதியா இருந்திருப்பீங்க.. இப்ப பாரு.. உயிரோட இருந்தவரை அவங்க நிம்மதிய கெடுத்தேன்.. இப்பவும் , உன் சந்தோஷத்தை எல்லாம் குழில புதைச்சுட்டு இருக்கேன்‌.", என்று கதற.. வார்த்தைகள் அற்று நின்றிருந்தான் .

" ஒரு ரெண்டு நாள் டைம் குடு நந்து.. நான் இனிமேல் என்ன செய்யப் போறேன்னு என் முடிவை , உன்கிட்ட சொல்றேன்..", என்று ஏக்கமாக பார்ப்பவளை.. மெல்ல அணைத்தவன்..

" ரெண்டு நாள் இல்லை.. எத்தனை நாள் வேணாலும் எடுத்துக்க.. ஆனா, நீ என்னோட வரேங்கற முடிவை மட்டும் தான் எடுக்கணும்.. புரிஞ்சதா..", என்று மிக மிகத் தீவிரமாக கூறிவனின் பதிலில் முதல் திகைத்து.. பின் கேலியில் இறங்கியவளாய் ,

" இதுக்கு எதுக்கு டா.. எனக்கு யோசிக்க டைம் கொடுக்குறேன்னு பில்டப் குடுக்குற.. அதெல்லாம் , முடியாது என்னோட வான்னு நேரடியா சொல்ல வேண்டியது தான..", என்று கொஞ்சம் இலகுவா நீண்ட வருடங்களுக்கு பிறகு பேச.. 

" ச்சு.. அதை சொல்லீடுவேன்.. புதுசா.. முளைச்சு இருக்க அழு மூஞ்சி.. மறுபடியும் , தண்ணிய நிரப்பி.. வீட்டுக்குள்ள கப்பல் ஓட்ட வேண்டாமேன்னு பார்த்தேன்.‌", என்றான்..

நேசமே சுவாசமாய் Where stories live. Discover now