நேசமே சுவாசமாய் - 29

323 19 7
                                    

தேகத்தின் உரசல்

பகுதி - 29

ஷாக்ஷியின் விழிகள் அந்த தொலைக்காட்சியை விட்டு அகன்றிருக்கவில்லை. அவளுடைய பார்வையோ, சஞ்சயை மட்டுமே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. வஞ்சனையே இல்லாமல் அவர்களும், அவன் தீக்குள்ளே பாய்வதையே காட்டிக் கொண்டிருக்க.. எதிரே அமர்ந்திருந்த விதுரே அதிக கோபத்திற்கு ஆளானவனாக இருந்தான் .

ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல், " ச்சை.. நம்ம நினைச்சது எதுவுமே நடக்கவில்லை.. நீ என்னன்னா.. இப்படி அமைதியா பார்த்ததையே பார்த்துட்டு இருக்கே..", என்று வெளிப்படையாக கொதித்தவனை ஒற்றை பார்வையால் அடக்கியவள்.. 

" நான் இத்தனை வருஷம் கத்துகிட்ட ஒரே விஷயம்.. காத்திருப்பு.. நமக்கு வேண்டியது நடக்கனும்னா.. அதுவரைக்கும் காத்திருக்கணும்.. சமயத்துக்காக காத்திருக்கணும்.. இப்ப நடந்த விஷயம் எல்லாமே எதார்த்தமாக நடந்ததா நினைச்சுட்டு இருக்கான்.. ஆனா , இனிமேல் செய்யப் போறது எல்லாம் நான்னு தெரியனும்.. அதுக்கு உண்டான வழிய மட்டும் பாரு‌...", என்று கொடூரமாக அமர்ந்திருந்தவளிடம்.. அதற்கு மேல் பேசுவதற்கு எதுவும் இல்லை என்பது போல்.‌. அமைதியானவன்..

" நான் என் வேலைய ஆரம்பிக்கவா..", என்று கேட்க..

" ம்.. ஆனா இனிமேல் இங்க வராத..  அது உனக்கு நல்லது இல்லை.." என்று கட்டளையாக கூறவும்.. " ம்.. சரி.. நான் உனக்கு கால் (call) பண்றேன்..", என்று வெளியேறிவிட்டான்.

எதிர்பார்த்து காத்திருக்க.. ஏமாற்றாமாய் அமைந்ததில் அவளுக்கு அளவுக்கு அதிகமான கோபமே.. ஆனாலும் ,வேட்டைநாய் போல் காத்திருக்க வேண்டும் என்ற சிந்தனையில் கண்கள் பளபளக்க.. அடுத்து என்ன என்ற யோசனைக்குள் மூழ்கியவளை முழுதாய் சிந்திக்க விடாமல் தடுத்திருந்தது.. வந்த தகவல்.. 

" வாட்.." என்று அதிர்ந்து.. வேகமாக எழுந்தவள்.. தன் கையில் இருந்த ரிமோட்டால் சேனலை மாற்றி பார்த்ததில் திகைத்து நின்றுவிட்டான்.

பெங்களூரின் பிரபல ரௌடி 'அக்னி அமீஜா..' நேற்றிரவு படுகொலை.இரு பெரிய ரௌடிகளுக்கு இடையே ஆன போட்டியாக இருக்கலாம் என்று காவல்துறை கூறுகிறது .நான்கு ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகு , வெளியான கோட்டி என்னும் பெரிய ரௌடியே மீண்டும் பெங்களூரை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர செய்ததாக தகவல்.. அவனுடைய தலைமறைவு பெரும் சந்தேகத்தையும் விதைப்பதாக.‌. பெங்களூர் கமிஷனர் கூறுகிறார் என்று ஒளிப்பரப்பு ஆகிக் கொண்டிருக்க.. " ஆ... ஆ..." என்று வெறிப்பிடித்தவள் போல்.. ரிமோட்டை விட்டெறிந்தவளுக்கு.. தான் நினைத்தது நடக்காமல் போன ஏமாற்றம் .

நேசமே சுவாசமாய் Where stories live. Discover now