நேசமே சுவாசமாய் - 47

244 14 3
                                    

கண்டு கொண்ட சுகந்தம்‌

பகுதி - 47

எதையும் ஆழமாக நேசிக்காதே துன்பப்படுவாய்..

எதையும் ஆழமாக யோசிக்காதே குழம்பி விடுவாய்..

எதையும் எங்கும் ஆழமாக யாசிக்காதே - அவமானப்படுவாய்..

எவ்வளவு உண்மையான சொற்கள்.. என்று புத்தரின் பொன்வரிகளின் நினைவுகள் , அவன் மூளையில் உதித்து . இதழ்களில் விரக்தி பூக்கச் செய்ய .. நித்திரையில் உறங்காது வெறித்திருந்த நரேனின் விழிகளோ.. பால்வீதியில் சிதறிக் கிடக்கும்.. புள்ளியை ஒருங்கிணைத்து உருவம் காண முயன்றுக் கொண்டிருந்தது.. 

ஆழமாக யோசிக்காதே துன்பபப்படுவாய்.. என்று தெரிந்தே முதல் காதலின் தோல்வியை அவன் சிந்திக்கத் தொடங்க.. அது வெறும் துன்பமாக மட்டுமாகவா இருந்தது.. ம்ஹூம்.. காதல் என்று நேஹா யாசித்து நின்றபொழுது.. அவனும் விருப்பத்தில் இணைந்துக் கொண்டானே.. எவ்வளவு பெரிய பிழை.. அவளை மறக்க முடியாமல் தன்னையே மறந்திருந்த நாட்கள் தான் எத்தனை எத்தனை.. ஆனால் , இன்று.. அதெல்லாம் வலியே அல்ல என்று நினைக்கும் அளவிற்கு.. மீராவின் கண்ணீரும் மௌனமும்.. இவைகளோடு இணைந்திருந்த அவள் கையெழுத்தும்.. அவனுள் சமட்டி அடியாய்.. இந்தளவிற்கு அவனுக்கு வலிக் கொடுக்கும் என்று அவனே எதிர்பாராதது.. 

நேஹாவை நேசித்து இன்னல்களில் விழுந்தாலும்.. மீண்டும் மீராவிடம் இந்த அளவிற்கு அவன் மனம் வீழ்ந்துக் கிடக்கும் என்று அவனே நினைத்துப் பாராதது . அவள் கூந்தல் மட்டும் அவன் சட்டையோடு பிணைந்துக் கொள்ளவில்லை போலும்.. அன்றே நேஹாவிடமும் அவளை விட்டுக் கொடுக்காமல் நடந்துக் கொண்டவனின் செயலும் நினைவிற்கு வர.. ஒவ்வொரு முறையும் பொய்த்துப் போகும் பந்தத்தில்.. அதுவும் அந்த குடும்பப் பெண்களிடமே.. எப்படி வீழ்ந்துக் போகிறேன்.. என்று எண்ணியவனின் உள்ளம் கனத்துக் கிடக்க.. துக்கம் தாளாமல் விழிமூடி இருக்கையின் பின்னே சாய்வாக  சாய்ந்துவிட்டான் .

" மீரா.. உங்க சொர்க்கம் ஹிட்லர்..", என்று கலையின் குரல் மென்மையாக ஒலித்து.. தலைகோதுவது போல் இருக்க.. தீர்வு காணவே முடியாத நிலையில் தள்ளிவிட்டாயே என்று கலையின் மடியில் தலைசாய்ந்து கதறத் துடித்துக் நினைவை புறந்தள்ள முடியாமல்.. பெருமூச்செறிந்து விழிகளை திறக்க.. எதிரே , கைகளை பிசைந்து தவித்தவளாய் நின்றிருந்தாள் மீரா.. 

நேசமே சுவாசமாய் Where stories live. Discover now