நேசமே சுவாசமாய் - 8

296 15 2
                                    

பகுதி - 8

எவ்வளவு மெதுவாக அடியெடுத்து வைத்தாலும் வேகமாகவே நெருங்கிவிடும். அருகிலேயே ,  இருக்கும் அறையில் மெதுவாக, அவள் காலடிப்பட்ட.. அடுத்த கணம் விருட்டென்று, மெத்தையில்  எழுந்து அமர்திருந்தான் சஞ்சய்.

கலையின் கரங்களில் இருந்த காபி அவனை தாஜா செய்ய நினைக்கும் பணியை செவ்வன செய்ய நினைப்பதை எடுத்துக்காட்ட , இதுவரை இருந்த அழுத்தம் அனைத்தும் பறந்தோடி , அதரங்களின் குடிக் கொள்ள நினைக்கும் புன்னகையை விழுங்குவதற்கு பெரிதும் பாடுபட்டவனாய்.. அசையாமல், அவளை மட்டுமே பார்த்திருக்க.. மிக மிக தயங்கியவளாய்.. 

எத்தனை வருடங்கள் கடந்திருந்தாலும்.. எத்தனை எத்தனையோ விதமாய் தங்கள் இருவரின் நேசத்தை பகிர்ந்திருந்தாலும்.. எவ்வளவு அழுத்தமாக அவள் இருந்து.. அவனையே வாய் திறக்க வைத்து.. தன் மேலான காதலை சொல்ல வைத்திருந்தாலும்.. அவனுடைய ஆழ்ந்திருக்கும்.. இந்த பார்வைக்கு மட்டும் இன்றுவரை, அவளால் அவன் மீதான பயத்தில் இருந்து வெளிவர முடிந்ததில்லை. தலையணையை நிமிர்த்தி.. அதன் மீது சாய்ந்தவனாய் .. நீட்டிய காலை ஒன்றின் மீது ஒன்றை வைத்து.. அகலாது பார்த்திருந்தவனின் வீச்சை தாள முடியாமல் கால்கள் பின்னிக் கொள்ள..

இன்றுவரை, தன்னிடம் அவள் போட்டிப் போட்டு வெளிப்படுத்தும்.. அச்சத்தையும், தவிப்பையும் விடுவதாக இல்லை. அவனும் அவள் உணர்வுகளின் குவியலாய், தன் முன் நடுக்கத்தோடு இருக்கும் தருணங்களில்.. தன் ரசனையை நிறுத்தியதாகவும் இல்லை.

கரங்களில் இருந்த வளையொலி எழுப்ப.. கீழுதட்டை உள்ளிழுத்து காபியை அவன் முன் நீட்ட.. அவனது பார்வை என்னவோ.. நீட்டிய கோப்பையில் இல்லாமல்.. அவள் அதரங்களிலேயே பதிந்திருந்தது. ஆனால் கலையோ, பார்வை நிமிர்த்தாது.. பல நாட்களுக்குப் பிறகு, அவனுடைய கோபத்தை உணர்ந்ததால்.. விழியை நிமிர்த்தாமல் அவன் முன் நின்றிருக்க.. நாளுக்கு நாள் அவள் மீதான அழகு கூடியதாகவே தெரிந்தது அவள் கள்வனுக்கு..

நேசமே சுவாசமாய் Where stories live. Discover now