நேசமே சுவாசமாய் - 28

288 17 3
                                    

பகுதி - 28

சஞ்சய் கொஞ்சமும் யோசனையின்றி பாய்வான் என்று அங்கிருந்த ஒருவரும் நினைக்கவே இல்லை. அது மேலும் பதற்றத்தை கொடுத்து வேலைகளை துரிதமாக்க , கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு.. அவனையும் சேர்த்து விழுங்குவதிலேயே குறியாக இருந்தது.. அதன் வெப்பம் அவன் உடலை அதிகமாக தாக்கினாலும்.. அவன் சிந்தனை முழுவதும் , அங்கு ஆறு நபர்கள் மட்டுமே இருக்கிறார்களா என்பதிலேயே சுற்றி சுற்றி வந்து அலைக்கழிக்கவே புகுந்துவிட்டான் .

அவனுடைய உள்ளுணர்வு எதனாலோ , வந்த தகவலை அப்படியே ஏற்க மறுத்ததாய்.. பாய்ந்து சென்றவனின் மேலே குபீர்..குபீரென்று அகங்காரத் சத்தத்தோடு.. அவனை விழுவதற்கு போட்டிப் போட்டுக் கொண்டிருக்க.. லாவகாமாக மாட்டிக் கொள்ளாமல் நகர்ந்தவனின் உள்ளக் கொதிப்போ.. இந்த தீக்களின் தாக்குதலைவிட கூடதலாகவே இருந்தது.

அதுவரை , தங்களுக்கு தோன்றியதெல்லாம் பேசிக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களுக்கு.. இந்த செயலும்.. வந்தபொழுது அவன் முகத்தில் துளி பதற்றம் இல்லாது காணப்பட்ட நிதானத்தை வியந்திருந்தாலும்.. உயிரின் மதிப்பு தெரியாத மருத்துவன்.. துச்சமென நினைக்கும் தொழில் அதிபன்.. தொழிலார்களின் நலனில் அக்கறையற்றவன் என்று சாடிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் வாயில் பூட்டை மாட்டியது போல் அவனுடைய செயல் இருக்கவே.. ஏற்கனவே இருந்த பரபரப்பை விட மிகுதியாகவே , காணப்பட்டது.

சஞ்சயின் புத்திக்குள் வேறு எதுவுமே பதியவில்லை.. அர்ஜுனனின் அம்பு போல் தன் குறிக்கோளை மட்டுமே நோக்கிப் பாய்ந்தவனாக.. தேடிக் கொண்டிருந்தான் . கிட்டதட்ட அரைமணி நேரத்திற்கு மேலாக அலைந்தவனின் விழிகளில்.. ஒரு பகுதியில் மேற்கூறையே இடிந்து விழுந்திருப்பது பட்டிருக்க.. முழுமையாக தரையில் விழுந்திருக்காமல் சரிந்த நிலையில் இருக்கவும்.. அங்கு, நெருங்கும் வேளையில், நெருப்பின் பேரிரைச்சலைவிட அதிகமாக, மக்களின் கூச்சம்.. வேகமாக அவனது கால்கள் ஓடி.. ஆறு அல்ல இருபதுக்கு மேற்பட்டரோ குழுமியிருக்கவே.. அவர்கள் அனைவரையும் அரணாக ஒருவன்.. காத்து நின்றிருந்தான் .

நேசமே சுவாசமாய் Where stories live. Discover now