நேசமே சுவாசமாய் - 37

516 19 14
                                    

அவன் அருகில்..

பகுதி - 37

கலை சமையலறையில் இருக்கும் திரையில் ஒரு கண்ணும்.. தோசைக்கல்லில் ஒரு கண்ணுமாய் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். நள்ளிரவு பனிரெண்டு நெருங்கிக் கொண்டிருக்கிறது.. ஆனால் , சஞ்சய் வீடு திரும்பி இருக்கவில்லை.. அவன் வந்த பிறகு, இரவுணவை அருந்தலாம் என்று அவள் தவிர்த்திருக்க.. தன்னவனோ.. பத்து நிமிஷம் கனி.. பத்து நிமஷம்.. என்று எத்தனையோ பத்து நிமிடங்கள் கடந்துவிட்டத்திவிட்டான்.. ஆனால் , அவனுக்கு இன்னும் அந்த பத்து நிமிடங்கள் வரவில்லை போலும்.. 

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பவளுக்கு.. பசி இல்லை என்றாலும் , அதன் பசியாற்ற வேண்டுமே.. இதற்கே , இரு தினங்களாக, அவள் குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதால்.. சரியாக உணவு  உட்கொள்ளாததால் , குழந்தைக்கு வேண்டிய அளவு ஆகரத்தை.. அவள் மார்பு சுரக்க தவறியிருக்க.. அந்த பிஞ்சும் சிணுங்கிக் கொண்டே இருக்கிறது . 

பணம் இருந்தால், எது வேண்டுமானாலும் செய்யலாம்.. இதோ, ஓடிக் கொண்டிருக்கும்  தொலைகாட்சியில் ஒளிரும் திரையை பார்த்தாலே போதும்.. பிள்ளையை தொட்டிலில் கிடத்தி.. கிளுகிளுப்பை பொருத்தும் இடத்தில் பொம்மையோடு , கண்காணிக்கும் கேமிராவை பொருத்தி வைத்தவர்களால்.. அவள் என்ன  செய்கிறாள் என்பதை தெளிவாய் தெரிந்துக் கொள்ள முடியுகிறது.. இது அல்லாமல்.. குழந்தையின் உடல் அசைவை வைத்தே... அலாரம்  இசைக்க தொடங்கிவிடும்.‌‌. அவள் அழுகைக்கு தயாராகிக் கொண்டுருக்கும் பொழுதே ,   அவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் கருவியும் உண்டு.. அத்தோடு இல்லாமல்.. தங்களின் அறைக்குள்ளேயே‌.. மின்தூக்கி வசதியையும் ஏற்படுத்தவிட்டான் . அவை எல்லாம் கொடுத்த தைரியத்தில் , குழந்தையை மாடியில் விட்டு வந்தவளாய்.. கலை சமையற்கட்டில் நின்று தோசை ஊற்றிக் கொண்டு இருந்தாலும்.. ஏனோ , எண்ணங்கள்.. அவள் நாயகனையை சுற்று வந்துக் கொண்டிருந்தது .

எப்பொழுதும் , சஞ்சய் வீடு திரும்புவதற்கு காலநேர அளவே கிடையாது.. அதுவும் , பூனேவில் இருந்தான் என்றால் ‌. சொல்லவும் வேண்டியிருக்காது. அப்படி இருக்கும் பொழுது, அவளுடைய தற்பொழுதிய கவலை அர்த்தமற்றது.. என்று அவள் மூளையே இடித்துரைத்தாலும்.. அவன் நடந்துக் கொள்ளும் விதம்.. அவளால் அவ்வளவு இயல்பாக இருக்க முடியவில்லை என்பதே உண்மை.. 

நேசமே சுவாசமாய் Where stories live. Discover now