நேசமே சுவாசமாய் - 41

184 11 2
                                    

கோயில் திருவிழா

பகுதி - 41

இரம்மியமான மாலை பொழுதில்.. கல்லூரி படிப்பு முடித்த பிறகும், சிறுபிள்ளையென தாய் மடியில் விழுந்திருப்பவனாய்.. கலையின் மடியில் அகில் உறங்கியிருக்க.. கீர்த்தியால் கலையை நிமிர்ந்தும் பார்க்க இயலவில்லை.. கணவனிடம் வெளியிட்ட வார்த்தைகள்.. அவனை மட்டும் தாக்கியிருக்காது..  , தெரிந்தே செய்த செயல்.. நந்தனிடம் , மன்றாடி.. தோற்று, தன் தோழியாவது புரிந்துக் கொள்ள மாட்டாளா என்று வந்திருந்தவளிடம்.. இதுவரை, தன் கோபத்தை பார்வையாலும் வெளியிடாதவளாய் மிக இயல்பாகவே நடந்துக் கொண்டிருக்கிறாள் . ஆனால் குற்றம் செய்த நெஞ்சமோ, இயல்பை ஏற்க முடியாமல்.. மன்னிப்பும் , கொடிய தண்டனையாக மாறியிருக்க.. உள்ளுக்குள் நொடிக்கு ஒருமுறை செத்து மடிந்துக் கொண்டிருக்கிறாள்..

" என்ன கீர்த்தி.. நின்னுட்டே கனா காணுற.. வா..வந்து உட்கார்..", என்று கலையின் குரல் அவளை கலைக்க..

" இல்லை.. அம்மா உன்னை உள்ள வரச் சொன்னாங்க.. பனில இருக்க வேணாம்னு.. அதான்.. வா உள்ள போகலாம்..", என்றாள்.

" பாரு.. எப்படி தூங்குறான்னு.. டேய்.. தடிப் பையா.. எழுந்திரி.. கால் வலிக்குது.. ", என்று லேசாக அவன் தோளை ஒரு தட்டுத்தட்டி அழைக்க‌.. அகிலும் , சில நிமிடங்களாகவே இருந்தாலும்.. ஆழ்ந்த துயிலுக்கு சென்று மீண்டது புரிய..

" ஸாரி.. வஹினி.. தூங்கீட்டேன்.. ரொம்ப கால் வலிக்குதா.. அப்பவே எழுப்பியிருக்கலாம்.. இல்ல..", என்று பதற.. " ஏன்டா.. இவ்வளவு நாள் இந்த வஹினி.. உனக்கு இன்விஸிபில் ஹ்யூமனா.. இருந்தேனா..' என்று கேட்க நா துடித்தாலும்.. உதடு கடித்துப் புதைத்துக் கொள்ள.. ஆனால் அவள் விழிகளோ, அவனுக்கு அழகாய் படம் பிடித்துக் காட்டியது .. 

" வ..ஹி..னி.. ", என்று தடுமாற.. சொற்கள் எதையும் உதிர்க்காமல் சிரித்த முகத்தோடு நின்றிருக்க..

" சரி.‌.. வாங்க உள்ளே..", கீர்த்தி மறுபடியும் அழைத்ததில் நகர்ந்தவளிடம்.. " ராகுல் கூப்பிடுறான்.. நான் வரேன்.. னி.. ", என்று சிறுதலையசைப்பில்.. அவன் விடைப் பெற்று வெளியேறிவிட்டான்.. 

நேசமே சுவாசமாய் Where stories live. Discover now