நேசமே சுவாசமாய் - 24

237 16 7
                                    

அன்று போல் அவன்
கரங்களில்..

பகுதி - 24

குறும்பு விழிகளும்.. காதல் ததும்பும் கண்களுமாய் துள்ளலோடு வலம் வருபவனின்.. இந்த தோற்றம் கீர்த்தியை சாட்டை அடியாய் தாக்க.. விக்கித்து நின்றுவிட்டாள் . அவள் முகத்தில் அப்பட்டமான வலியை கண்டவனாலும் சந்தோஷமாக இருக்க முடியவில்லை.. ஏன் இப்படி பேசினால் என்று காரணம் தெரிந்திருக்காவிட்டால்.. அவளிடமே , கோபமாக கேட்டு சண்டையிட்டிருப்பான்.. ஆனால், அவள் அவ்வாறு பேசியதற்கான காரணமே அவனுடைய அன்னை என்பதை அறியாதவனோ.. தெரியாதவனோ இல்லையே.. 

நந்தனின் கோபமே.. எப்படி கீர்த்தி தன்னை விட்டு விலக முடிவெடுக்கலாம் என்பதிலேயே இருந்தது . அப்படி, துணிந்து முடிவெடுக்க முடிந்தவளால்.. இப்பொழுது எதற்காக, இந்த வலியும் வேதனையும்.. தன்னை நினைக்காமல் போனாலே என்ற வருத்தமே மிதமிஞ்ச ஆடவனை அரித்துக் கொண்டிருக்க.. சில விஷயங்களுக்கு கடுமையால் மட்டுமே இது போன்ற தவறுகள் ஒருபோதும் இனிவரும் நாட்களில் இடம் தர மாட்டாள் என்று நினைத்தவன் குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது.. படுத்தியெடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்க.. கீர்த்தியோ ,ஒரே நாளில் உருக்குழைந்தவளாய் மாறியதில் ஆடவனாலும் நிம்மதியா இருக்க முடியவில்லை.

தன் முடிவு சரியா.. தவறா.. என்று புரியாமல் குழம்பியவனுக்கு, சடுதியில் நினைவிற்கு வந்தவள் கலை மட்டுமே..நேரத்தை பற்றிய யோசனையுமின்றி அவளுக்கு அழைத்துவிட்டான் .

" கலை.." என்ற ஒற்றை அழைப்பிலேயே நண்பனின் மனநிலையை நன்கு புரிந்தவளாய்..

" சொல்லு நந்து.." என்று தூக்க கலக்கத்தில் அவளது குரல் ஒலிக்க..

" தொந்தரவு பண்ணீட்டேனா.. " என்றான் மிகுந்த சங்கடத்தோடு.. 

" கீர்த்தி எப்படி இருக்கா.. நீ எப்படி இருக்க.." என்றதிலேயே , அவள் இங்கு வந்திருப்பது தோழிக்கும் தெரிந்திருக்கிறது என்று புரிந்தவனாய்..

நேசமே சுவாசமாய் Where stories live. Discover now