நேசமே சுவாசமாய் - 21

232 17 3
                                    

வெறிப்பிடித்த மிருகமாய்

பகுதி - 21

வெறிப்பிடித்து அலைந்த நாட்களின் நினைவுகளில் இருந்து விடுப்பட முடியாதவனாய்.. மோகித் தன்னையே வெறுத்தவனாக.. துணிந்து தவறுகள் என்று தெரிந்தே , திமிராக செய்த பொழுது தெரியாதது.. இப்பொழுது , இருட்டில் வெளிச்சதை தேடி அலைபவனாக இருந்தவனுக்கு, கலையின் வருகை நம்ப முடியாததாகவே இருந்தது .

முடமாகப்பட்ட நிலையில், அவன் வாழ்க்கை தொடரப்போகிறது என்று தெரிந்திருந்தால் , அன்றே அவ்வாறு அவனிடம் தன் கோபத்தை காண்பிக்காமல் இருந்திருப்பாளோ.. இன்று , அவன் இருக்கும் நிலைக்கு அவனுடைய கேடுக்கெட்ட குணமே காரணம் என்று தெரிந்தே இருந்தாலும்.. இப்படி ஒரு நிலைக்கு அவனை ஆளாகியது.. அவளை சார்ந்தவர்களால் என்பதை ஏற்க முடியாமல் தடுமாறி நின்றாள் கலை .

" மோகித் ஸார்.. இந்த வாழ்க்கை எப்படி இருக்கு.." என்று பாலாவின் நக்கலுக்கு..

மென்னகை புரிந்தவனாய் , "பொண்டாட்டி அருமை.. நல்லா தெரிஞ்சிடுச்சு ஸார்.." , என்றவன் தொடர்ந்து , " என்னை மன்னிச்சிடுங்க கலை ", என்றான் .

" எதுக்கு மன்னிப்பு கேக்குற டா..' , என்று வேகமாக எழுந்த பாலாவிற்கு இப்பொழுதும் ஆத்திரம் அடங்க மறுக்க, இந்த முகத்தை அவன் வீட்டில் காட்டியதே இல்லை ‌‌.. அதனால் திகைத்து, ஓர் அடி பின்னே நகர்ந்திருந்த கலையின் செயலால் மட்டுமே நிதானத்திற்கு வந்திருந்தான் . 

" ஷிட்.. இவனுக்காக நீ அழ றியா கலை.. போயும்..போயும் இவனுக்காகவா.. சொல்லு கலை.. இவன் உனக்கு என்னென்ன செஞ்சான்னு தெரியுமா.. சொல்லு கலை.. " என்று அவளையும் விட்டு வைக்கவில்லை.

" சொல்லுங்க மோகித்.. இவங்கள கூடீட்டு வந்தா.. எல்லாம் சொல்றேன்னு சொன்னீங்களே.." என்று பாலாவின் சீற்றம் தாளாமல்.. அனு அவனிடம் கேள்விக் கேட்க தொடங்கியதும்.. ஒருவரின் முகத்தையும் ஏறிடும்.. தைரியம் அற்று இருக்க..  தன் கண்களை மூடிக் கொண்டு.. படமாய் விரிந்த காட்சிகளோடு ஒன்றியவனாய்.. பாலாவும் இணைந்துவிட்டான்.. 

நேசமே சுவாசமாய் Where stories live. Discover now