நேசமே சுவாசமாய் - 38

188 14 3
                                    

புன்னகையில் ஒளிந்திருக்கும் வஞ்சம்

பகுதி - 38

அவள் குழப்பங்களையும் மீறி , சஞ்சயின் அருகே ஒரு நிம்மதி.. அவன் நெஞ்சில் தலை சாய்த்து, சுகமாக துயல் கொண்டிருந்தவளை மென்மையாக வருடியது அவன் விரல்கள். கலையின் சஞ்சலத்தை நன்கு புரிந்தே இருந்தாலும்.. அவளிடம் வாய் திறக்க விரும்பாதவனாய்..

ஆனால், பாறையை ஒத்திருந்த முகத்தின் உணர்ச்சிக்கு சற்றும் பொருத்தமில்லாதவனாய்..  அவன் விரல்கள் காற்றை விட மென்மையாக கலையின் கூந்தலை வருடிக் கொண்டிருக்க..  எண்ணங்களின் தேடலோ , அவன் செய்ய தவறிய செயல்களில் வந்து நின்றதில்.. மெல்லிய நீர்ப்படலம் கண்களில் சூழ்ந்திருந்ததோ.. தன் பிடிவாதத்திற்கு தீனிப் போட்டதன் விளைவு... இன்று , ஒவ்வொரு நொடியும்.. பயம் என்ற வார்த்தை அறியாதவனையே.. அச்சம் ஆட்கொண்டிருப்பதை அவன் மட்டுமே அறிவான் .

தன் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவிலும்.. அவள் வாசம் நிறைந்திருந்திருக்கும் பொழுதும்.. தன் பிடிவாதத்தை கொஞ்ச தளர்த்தியிருந்தாலும் எப்பொழுதோ.. இத்தனை துன்பத்திற்கு ஆளாகாமல்.. கலையோடு சந்தோஷமாகவே வாழ்ந்திருக்க முடியும்.. அதுவும் , கருப்பு ஆடான.. ஷாக்ஷி நுழைவதற்கு இடமே ஏற்பட்டிருக்காது. அவன் செய்த மிகப் பெரிய பிழை.. தன் காலை சுற்றிய பாம்பு என்று தெரிந்திருந்தும் அனுமதித்தது.. சூரியனை விழுங்கும் கிரகணமாய் மாறி, இருப்பவளை ஒரேடியாக , சாய்த்துவிடுவது என்பது.. அவ்வளவு கடினமான செயலும் இல்லைதான்.. அஞ்சா நெஞ்சனையே பதற வைத்தவளுக்கு.. கிடைக்கும் தண்டனையும் எளிதாக இருப்பதில் அவனுக்கு விருப்பம் இல்லை. யார் என்று அறியாத போதே.. தனக்காக காத்திருந்து..  தன்னையே நினைத்து  நினைவுகளாலேயே வாழ்ந்ததோடு அல்லாமல்.. தன் மகனையும் உலகு அறிமுகம் செய்திருந்த  கலை எங்கே..!

பெறாத பெற்றவர்களுக்காக..  என்று தான் திருமணத்திற்கு சரி என்று தலையாட்டிய செயல்..  காரணம் எதுவாக இருந்தாலும்.. கலையை விட்டுக் கொடுத்து எவளோ , ஒருத்தியை தன் வாழ்வில் அனுமதியளித்த  தான் எங்கே.. !.. என்று  நினைத்துக் கொண்டு.. நித்தம் நித்தம் வெந்து தணிபவனுக்கு அன்று தெரிந்திருக்கவில்லை . அவனே, அவன் உயிருக்கு மேலான மனைவிக்கும் , மகனுக்கும் எமனாகி போவோம் என்று..

நேசமே சுவாசமாய் Where stories live. Discover now