நேசமே சுவாசமாய் - 14

227 16 2
                                    

பகுதி - 14


ஏனோ.. கலையின் நினைவுகள் செல்லும் இடத்தை பற்றியே சுற்றிக் கொண்டிருக்க.. தியாவை காணப் போகும் ஆர்வம்.. எத்தனை மாதங்களாகிவிட்டது என்ற நினைப்பு கிளர்ந்தெழ.. என்றும் போல் இன்றும் தாய்மையின் சிந்தனையில் அவளது மார் நனைந்தே காணப்பட்டது எனலாம்.

நிதினை நினைக்கையிலேயே.. உதடுகள் தன் போல் விரியும்.. மனதிற்கு மிகவும் பிடித்தமானவளை மணம் முடித்த பிறகும் நெருங்கவும் முடியாமல்.. விலக்கி வைக்கவும் தெரியாமல்.. சஞ்சயின் மறுபதிப்பாக நடந்துக் கொள்ளவதை நினைத்தாலே.. சிரிப்பும்.. துக்கமும் ஒன்றாய் அவளுள் எழுந்து ஆட்டிப்படைக்க..

அவனுடைய அலுவலகத்தில் , தான் கால் வைத்ததை நினைத்து பார்த்தவளுக்கு.. நிகிலால் சுமையாய் இருந்த நாட்களின் பொழுது.. வாழ்வில் சிறு பிடிப்பையும் மலர்ச்சியையும் தந்தது என்றால்.. தியாவும்.. அவள் வேலை பார்த்த அலுவலகமும் தான் . அவள் கவலைகளை மறந்து.. தன் நிலையை மறந்தவளாய்.. பல மாதங்களுக்கு மேல் இருந்ததிற்கு பேருதவியாய் இருந்தவர்கள் பரத் மற்றும் மதுமிதா..

தன் மகனை பிரிந்திருந்த ஏக்கம் பெரிதாய் வாட்டி எடுத்தாலும்.. தியாவின் நிலைமையை அந்த மாளிகையில் உணர்ந்த நொடி.. கலைக்கு.. தாய்மையுணர்வு மேலிட, துடிதுடித்து விட்டாள். ஆயிரமாயிரம் நியாயமான காரணங்கள் அவளை தனித்து வைத்திருப்பதற்கு காரணங்கள் இருந்தாலும்.. சிறு குழந்தையை சூடு நீரில் விட்டதோடு அல்லாமல்.. ஐந்து மணிக்கு வந்து நல்லவள் போல் வேடமிட்டவளாய்.. அவர்கள் நிர்ணயத்திருந்த பெண் இருக்க.. அவள் கூறுவதை கேட்கவும் பிரியமில்லாதவனாக வெளியேறியவனின் நரேன் செயலில்.. கலையின் உயிர் துடிதுடித்தது என்றால் மிகையில்லை.

அந்த கணம் முடிவெடுத்தவளாய் , இங்கு இருக்கும் இரு அநாதைகள்.. ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருந்துக் கொள்வதென்று .. சிவந்திருந்த குழந்தை மேனியை பார்க்க.. பார்கக.. துடித்து வெளி வரும் அழுகையை கட்டுப்படுத்தியவளாய்.. மாலை அக்குழந்தையோடு.. கூகுலின் உதவியை நாடி அருகில் இருந்த சிறிய கிளீனிக் அழைத்துச் சென்றாள்.

நேசமே சுவாசமாய் Where stories live. Discover now