நேசமே சுவாசமாய் - 10

264 15 5
                                    

பகுதி - 10

கண் கெட்டப் பிறகு , சூர்ய நமஸ்காரம் செய்த கதையாகி போனது கீர்த்திக்கு.. அவன் வெளியேறிய பிறகே , தன் சுயத்தை அடைந்தவளாய் கீர்த்தி.. "நந்து.. " என்று பின்னோடு ஓட , ஆக்ரோஷமாக நெருங்கியவன் அவளது கழுத்தை இறுக்கி..

"இன்னொரு தடவை, இந்த பெயர் உன் வாயில இருந்து வந்தது.. " என்று பிடியை விடாது உறும.. பாலா சியாமளா என்று அனைவரும் அவனை இழுத்தாலும் அவளிடமிருந்து அவன் கரத்தை அசைக்கவே முடியவில்லை..

" நந்தா.. விடு நந்தா.. நீ மொத்தல்ல கைய எடு.. பாரு அவளுக்கு கண்ணு சொறுகுது.. கைய எடுன்னு சொல்றேன்ல.." என்று ஆளாளுக்கு ஒவ்வொன்றாய் கூவ.. அருவருப்பில் விடுத்தவன்.. 

சியாமளாவிடம் திரும்பி , " நான் வரும் பொழுது.. இவ இந்த வீட்டுல இருக்கக் கூடாது.. இவ மட்டும் இருக்கக் கூடாது.. என் பொண்ணு மேல இவ பார்வை கூட படக் கூடாது.. நான் திரும்ப வரனும்னு நினைச்சீங்கன்னா சொன்னத செய்ங்க.." என்று அவன் கூறிய அர்த்தம் புரிந்த நொடி,  "நந்தா.." என்று சியாமளா வெடித்திருக்க.. கீர்த்தியோ.. மயங்கி சரிந்துவிட்டாள் .

பார்த்து பார்த்து தன் நேசத்தால் அவன் மட்டுமே கட்டிய அழகிய கூடு.. நொடிப்பொழுது தவறிய நிதானத்தால் தான் பிய்த்து எரிந்திருக்க.. விழித்தெழுந்தவளுக்கு.. நந்தன் உதிர்த்த.. வார்த்தைகளுக்குப் பிறகு.. அங்கே இருக்க முடியாமல் தள்ளாடியவளாய்.. ஒருவரின் முகத்தையும் ஏறிடும் அருகதையற்று , தளர்ந்த நடையோடு வெளியேறிவிட்டாள் . எவ்வளவோ தடுத்து போராடிப் பார்த்த போதும்..

"இது ஒன்னையாவது .. அவங்க சொல்றத கேட்குறேனே அத்த.."  கதறியவள் மகளையும் திரும்பி பார்க்காமல் நகர்ந்துவிட.. பின்னோடு வந்த பாலா.. வீட்டில் விட்டுவிடுவதாக கூறிய போதும்..

" வேண்டாம் மாமா.. நானே போறதா இருக்கட்டும்.." என்று கையெடுத்து கும்பிட்டு , அந்த இரவு நேரத்தையும் பற்றி யோசிக்காதவளாய் நகர்ந்து விட்டாள்.

அவள் கரத்தை விடாது பிடித்த பாலா.. ட்ரைவரை அழைத்து கொண்டு விடச் சொன்னாலும்.. பின்னோடு அவளைத் தொடர்ந்தவனாய்.. அவள் வீட்டிற்குள் நுழைந்த பிறகே, அங்கிருந்து நகர்ந்திருந்தான் .

நேசமே சுவாசமாய் Where stories live. Discover now