நேசமே சுவாசமாய் - 22

224 18 4
                                    

கீர்த்தியின் கனடா பயணம்

பகுதி - 22

கலையால் மோகித்தின் நிலைமையை ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை.

" ஏன் பாலா ண்ணா.. உங்களுக்குமா தெரியாது.. தப்பு பண்றவங்க தண்டனை அனுபவிக்காலாம்.. அதுக்கா.. அவங்களுக்கும் ஒரு குடும்பம் இருக்கும் என்று எப்படி எல்லாரும் மறந்தீங்க.. இவங்க மூனு பேரும் என்னண்ணா பாவம் பண்ணினாங்க.. இவர் செஞ்ச தப்புக்கு.. தண்டைனைக் கொடுத்தீங்க சரி.. இவங்களுக்கும் வழி செஞ்சிருக்கனுமா வேணாம்மா.. நம்ம குடும்பம் , ஊருக்கே அள்ளிக் கொடுக்குற குடும்பம் அண்ணா.. ஆனா நம்மலாலேயே.. இன்னைக்கு ஒரு குடும்பம் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுட்டு இருக்கு..  இவர்கிட்டயே நீங்க இப்படி நடந்து இருக்க கூடாது.. அதோடு இல்லாம ஒரு குடும்பத்தையே மறந்தது எப்படி அண்ண சரியாகும்.. என்ன மன்னிச்சிடுங்க மோகித்.. உங்க விபத்தை.. தப்புக்கான தண்டனையா நீங்க நினைச்சது ரொம்ப சந்தோஷம் எல்லாருமே மாறுவதில்லை.. திருந்தாத எத்தனையோ ஜென்மங்கள்.‌. நம்ம நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். உங்க திறமை மேல, எனக்கு எப்பவுமே மரியாதை உண்டு. குணம் தான் பிடிக்காது.. என்னையே நீங்க கூப்பிட்டு மன்னிப்பு கேட்டதிலேயே, நீங்க மாறிட்டீங்கன்றதுக்கு இதைவிட பெரிய அடையாளம் தேவையில்லை. எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க.. நம்ம பிடிக்கிற மண் , பிள்ளையாரா போவதும்.. குரங்காய் மாறுவதும்  நம்ம கையில தான் இருக்குன்னு.. நீங்க எப்படி வேண்டுமானாலும் வளர்ந்திருக்கலாம் ‌. ஆனா.. ஆனா உங்க குழந்தைகளையாவது நல்லபடியாக உருவாக்கணும்.. அதுக்கு சிறந்த அப்பாவா நீங்க இருக்கணும்.. நல்ல கணவனா.. இனிமேல் நடந்துக்கணும்.. பிறக்கும்போதே யாரும் தப்பா பிறப்பதும் இல்லை, அதே மாதிரி எல்லாரும் நல்லவங்களா இறப்பதும் இல்லை.. இனிமேல், உங்களோட தவறான எண்ணங்களுக்கு தீனி போடாம நல்லபடியா இருங்க.. அனு.. கண்டிப்பா உங்களுக்கு அண்ணா ஏதாவது வேலைக்கு ஏற்பட்டு செய்வாரு.. இந்த இடத்திலேயே இருக்க வேண்டாம்.. புது ஊர்.. புது மனுஷன்.. புது வாழ்க்கைன்னு நல்லபடியாக இருங்க..  உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் தயங்காமல் கேளுங்கள் கண்டிப்பாக செய்வோம்.", என்றாள் .

நேசமே சுவாசமாய் Where stories live. Discover now