நேசமே சுவாசமாய் - 9

273 19 7
                                    

பகுதி - 9

தாயின் மடியில் இருந்த , குட்டி தேவதை வயிறு நிறைந்ததும் சுகமாக துயல் கொள்ளத் தொடங்கிவிட்டாள். ஆனால் , இன்று முக்கியமான அறுவை சிகிச்சை இருப்பதாக கூறி, விரைவாக மருத்துமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்த சஞ்சய்யோ.. இன்னும் தெளிவில்லாதவனாய் அமரந்திருக்க.. குழந்தையை தொட்டிலில் கிடத்தியவள்..

" என்னங்க.. ஹாஸ்பிடல் கிளம்பலையா.." என்றவளிடம்..

" ம்.. சரி.. ஏய்.. கனி.. ஊருக்கு போகணும்னு முடிவு பண்ணினவ.. எப்பன்னு டிசைட் பண்ணியிருப்பீயே.." என்று அந்த சிந்தனையிலேயே உழன்றவனாக..

" அய்யோ.. அய்யோ.. நீங்க என்னங்க.. இப்ப அதுக்கு என்ன அவசரம்.. நைட் வந்து பேசிக்கலாம்... அதெல்லாம் அத்தைய கேட்கணும்.. " என்றதோடு.. அவனை கிளப்புவதிலேயே முனைப்பாய் இருந்தாள் .

" ம்.." என்று முணுமுணுப்புடன் வெளியேறியே பிறகே , அவளுக்கு சுவாசம் சீரானது போல் இருந்தது.

எவ்வளவு பிரியமாக இருந்தாலும்.. தங்கத் தட்டில் வைத்து தாங்குவது போல் தாங்கினாலும்.. அவனுடைய இயல்பான குணத்தை வெளிப்படுத்தாமல் இருக்க முடிந்தது இல்லை.. இன்றுவரை முழுமையாக மாறியதும் இல்லை.. கலையாலும் , அவனிடம் சில விஷயங்களுக்கு சட்டென்று நெருங்க முடிந்ததும் இல்லை.. அவனின் சினத்திற்கு அஞ்சியவளாய் .

" என்னம்மா.. என்ன சொல்றான்.. உங்க ரெண்டு பேரையும் அழைச்சுட்டு போக ஒத்துக்கிட்டானா.." என்று கேட்ட தன் மாமியாரிடம்..

" கிளம்பிற வரைக்கும் நம்ப முடியாது அத்தை.. ஆனா இப்ப.. நம்மல வேற்றுக் கிரகத்திற்கு அனுப்புற மாதிரிதான் ரியாக்ட் செய்றாங்க.. இன்னைக்கு ஹாஸ்பிடல் போயிட்டு வந்ததுக்கு அப்புறம்.. என்ன சொல்லுவாங்களோன்னு யோசனையா இருக்கு ", என்று சங்கடமாக சிரித்தாள்.

" ம்ஹும்.. அத்தை உன் வளைகாப்பையே அங்க நடக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டாங்க.. அதையும் இதையும் சொல்லி தட்டிக் கழிச்சுட்டான்.. இப்ப உன்னை தனியா விட முடியாதுன்னு சொல்லி படுத்துறான்.. கூடீட்டு போயிட்டா.. பெயர் சூட்டு விழாவாவது.. அங்க நடத்தலாம்ன்னு பார்த்தா.. இவன் பிடிவாதத்தை இன்னும் விடவே இல்லை.. அவங்களோட பேசுறான்.. இதை தவிர வேற எந்த மாறுதலும் இல்லை.. " என்று பெருமூச்செறிந்தவரிடம் ,

நேசமே சுவாசமாய் Where stories live. Discover now