முதலில் கொஞ்சம்...

11.6K 159 21
                                    

எங்க இந்த கதையை ஆரம்பிக்கிறது ?! டெய்லி நாம படிக்கிற நீயூஸ் பேப்பரிலே இருந்து ஆரம்பிப்போமா? ம்ச்..வேண்டாம்? அதுல என்ன சுவாரஸ்யம் இருக்கு.வயசான ஹீரோவுக்கு எப்போ கல்யாணம்?அந்த ஹீரோயினை கட்டுவாரோ? எதுக்கு கட்டணும்? கல்யாணம் வாழ்க்கையோட செட்டில்மெண்ட்டா என்ன? அபிராமின்னு பேரு வச்ச அழகான பொண்ணை எப்ப பார்த்தாலும் ஆஃப் மென்டல் குணாகிட்ட தான் கடவுள் கொண்டு போய் சேர்ப்பாரு.நம்ம ஹிரோயின் பேரு அதனால அது இல்ல. வேற என்ன பேரு ம்..மஹாலக்ஷ்மி..நல்லா நீளமா வைச்சுவிட்டாச்சு.எப்பிடியா பட்ட பொண்ணு இவ??!! ரொம்ப நீளமா பேரு அளவுக்கு யோசிக்காதீங்க. கையில் கிடைச்ச வாழ்க்கையை வாழ முயற்சிக்கு ஒரு வெகு சாதாரணமான பொண்ணு.சிரிப்பு மறந்து போற அளவுக்கு சீரியஸான வாழ்க்கைக்குள்ள சிக்கி மூச்சு முட்டி,உயிரோட இருந்தா போதும் வெளியே பிச்சுகிட்டு வந்த ஒரு வெர்சன் 2 பொண்ணு.என்ன வயசிருக்கும்? முப்பதுகளின் கடைசியில் இருப்பவள்.ஒரு ஆயா கதைக்கா இவ்வளவு பில்டப்புன்னு தோணுதுல்ல.உங்க அடுத்த வீட்டுக் கதை தான்,ஆனா நீங்க டைரக்ட் பண்ண முடியாது, கூட வேணா நின்னு அவங்களோடு வாழலாம். ஏன்னா ? ஹீரோ டைரக்டர்ல அப்ப எப்பிடி நாம டைரக்ட் பண்ணுறது? அவன் வேலையை அவனை செய்யவிடுவோம் என்ன?ஹீரோயினுக்கு ஒரு முழத்துல பேரு வைச்சிட்டு ஹீரோவிற்கு ஒரு எழுத்துல பேரு வைக்க முடியாதுல்ல அதனால விக்ரமாதித்யா! இவரு லாஸ்ட் இயர் பாஸ் அவுட்னு சொன்னா ,கர்ண கொடூரமா இருக்கும் அதனால ரெண்டு பேரும் கிட்ட தட்ட ஒரு மாதிரியான வயது நிலையில் உள்ளவங்க தான். நிறைய வலிகளில் இருந்து தப்பிச்சு வந்து அவங்க அவங்க வேலையில் முழு மூச்சாக இயங்கிக் கொண்டு இருப்பவர்கள். எதிரெதிர் திசையில் எக்ஸ்ட்ரா ஸ்பீடில் ஓடிக் கொண்டிருந்த இருவரையும் அடுத்தடுத்து நடக்க வைத்து அன்புடை நெஞ்சம் கலக்க வைத்தார் இந்த கடவுள்னு பார்ப்போம்!

கொஞ்சம் லேட்டா தான் ஆரம்பிக்கும் கதை, நீங்க எல்லாரும் அநியாய ஸ்பீடுல படிக்கிறீங்க அதான், கொஞ்சம் எழுதி வச்சிட்டு தான் போஸ்ட் பண்ண போறேன் !!

அன்புடை நெஞ்சம் கலந்தனவேМесто, где живут истории. Откройте их для себя