அத்தியாயம் 5

2.2K 169 10
                                    

"கண்டிப்பா சொல்லுறேங்க..நீங்க எந்த மாதிரி பொண்ணு எதிர் பார்க்குறீங்க.ஏன்னா இப்ப பொம்பள பிள்ளைங்க போடுற கண்டிசன் எல்லாம் தாங்க முடியல,ம்ஹூம்..பொம்பள பிள்ளைங்க வேற குறைச்சலா இருக்காங்களா..அவங்க என்ன சொன்னாலும் கேட்டுகிற மாதிரி ஆகிடுதுங்க" என்றார் ரத்தினம் சாப்பிட்ட கையை கழுவியபடி.

தானும் அவருக்கு அடுத்து கையை கழுவிவிட்டு ரத்தினத்துடனே கூட நடந்து சென்று முன் கூடத்தில் அமர்ந்தார் ஆதித்யனார்.

"ம்ம்..மறுமணம் செய்யிற பொண்ணுங்களுமா, அப்பிடி இருக்காங்க?" என்றார் ஆதி.

"ம்..ஆமா..அந்த பொண்ணுங்களும் தான் அப்பிடி இருக்காங்க, ஆனா நாம பொம்பள பிள்ளைங்களை சொல்லுறோம்..இப்ப பசங்களும் நாம நினைக்கிற மாதிரி இல்லைங்க, கூட வாழும் போது தான் ரொம்ப வெளியே வருது..உலகம் எங்க போகுதுன்னு ஒண்ணும் புரியலங்க ஆதி" என்றார் ரத்தினம் சலிப்பாக.

"ம்..தம்பிக்கு இன்னும் ஆறுமாசம் போனா 38 முடிஞ்சிரும்..ம்ச்..முதல் கல்யாணமே லேட்டா தான் பண்ணிக்கிட்டான்..ம்ச்..என்ன்மோ தேவதையை கண்ட மாதிரி பிடிவாதமா நின்னுட்டான், சரி எல்லாம் சரியா வரும் தான் கட்டி வைத்தோம்..ம்ச்..எங்க..ம்ஹூம்..முதல் கல்யாணம் செய்யிற பொண்ணுங்க ஒத்துக்குவாங்களா? விக்ரமிற்கும் வயசு வேற கூடிருச்சு" என்றார் கவலை தோய்ந்த தொனியில்.

"அது கொஞ்சம் சிரமம் தான் ஆதி, குழந்தைக்கு வேண்டி தான் நீங்க இப்பிடி கேட்குறீங்கன்னு எனக்கு புரியுது, ஆனா பொண்ணுங்க ஒத்துக்கணுமே அதுவும் இருக்கில்லியா?" என்றார் ரத்தினம்.

"ம்ஹூம்..புரியுது ரத்தினம், நீங்க பார்த்து சொல்லுங்க நாம பேசி பார்க்கலாம்.நம்ம பக்கத்து பொண்ணா இருந்தா பரவாயில்லைனு யோசிக்கிறோம், தெரியாத யாரையும் விட தெரிஞ்சவுங்களா இருந்தா பெட்டரா இருக்கும் இல்லியா..உங்களுக்கு தெரிஞ்ச சர்கிள்லே யாராவது இருந்தா சொல்லுங்க" என்றார் ஆதி.

"நிச்சியமா சொல்லுறேங்க, ஆனா இப்ப கூட ஒரு பொண்ணு இருக்கு, நம்ம தம்பிய விட ரெண்டு வயசு கம்மியா இருக்கும்னு நினைக்கிறேன்..ம்ச்..பாவம் இப்ப தான் கொஞ்ச நாள் முன்னாடி விவாகரத்து ஆச்சு" என்று நிறுத்தினார்.

அன்புடை நெஞ்சம் கலந்தனவேWhere stories live. Discover now