அத்தியாயம் 4

2.3K 166 15
                                    

அடுத்து வீட்டில் நடந்த விசேஷத்திற்கு வந்த மஹாவிடம், பூரணி தான் கொண்டாட்டமாய் திரிந்த மகளை இழுத்து பிடித்து, "உனக்கு எந்த மாதிரி பையன் வேணும்னு சொல்லு மஹா, ஒரு பயோடேட்டா மாதிரி ரெடி பண்ணி தர்றீயா? தெரிஞ்சவங்க கேட்டா கொடுக்கலாம்" என்றாள்.

"ம்..சரிம்மா பங்க்ஷன் முடியட்டும், ரெடி பண்ணி தர்றேன்" என்றவள் அடுத்த நொடி உறவுகளின் கூட்டத்திற்குள் கலந்து போனாள்.

வீசேஷம் முடிந்ததும், வருண் ஊருக்கு கிளம்பிக் கொண்டிருந்தவன் மஹாவிடம் வந்து "ஏ இப்பிடி எல்லாம் பயோடேட்டா கொடுத்தா வர்றவங்க கூட வரமாட்டாங்கப்பா, நான் வேணா மேட்ரிமோனியல்ல உனக்கு ப்ரொபைல் ரெடி பண்ணட்டுமா?" என்றான் அக்கறையாக.

"ஐயம் நாட் ஃபார் சேல்" என்றாள் பட்டென அவள் துணிகளை பெட்டியில் அடுக்கியபடி.

அந்த பதிலில் விக்கித்து தான் போனான் தம்பி.சரியாக அந்த நேரத்தில் அங்கு வந்த பூரணி."இல்லடி, அவன் சொல்லுறதும் சரி தானே உன் நல்லதுக்கு தானே சொல்லுறான்,இப்பிடி எழுதினா யாரும் பக்கதிலே நெருங்க கூட வரமாட்டாங்க. உன்னை பத்தி தான் தப்பா நினைப்பாங்க" என்றாள் அன்னை.

"ம்ஹூம்..அதிலே நான் எழுதியிருக்கிறது எல்லாம் என்னோட முன்னாள் கல்யாணத்தோட பை ப்ராடக்ட்மா, அது புரியுறவங்க பக்கதிலே வந்தா போதும்" என்றபடி பெட்டியை மூடி ஜிப்பிட்டாள்.

"என்ன அண்ணி, அப்பிடி பார்த்தா எங்களுது கூட மேட்ரிமோனியல் பார்த்து முடிஞ்ச கல்யாணம் தான்,அப்ப அதுக்கு என்ன சொல்லுறது" என்றாள் பிரியா.

"அதை பத்தி எனக்கு கமெண்ட் பண்ண ஒண்றுமில்லை" என்றாள் மஹா அவள் கண்ணை நேராக பார்த்து.

வருண் புரிந்தவனாய்,"ட்ராவலுக்கு வேண்டியது எல்லாம் எடுத்து வச்சிட்டீயா, போ எடுத்து வை" என்று கோபமாய் நின்ற பிரியாவை அங்கிருந்து கிளப்பினான்.

தம்பியின் தோளை தட்டி "நீ உன் பொண்டாட்டிக்கு உண்மையா இருக்கேன்னு ப்ரூவ் பண்ண என்னை பத்தி எல்லாத்தையும் சொல்லி பேரு சம்பாதிக்காதே.புரியுதா?" என்றாள் மஹா.

அன்புடை நெஞ்சம் கலந்தனவேWhere stories live. Discover now