அத்தியாயம் 33

2.9K 196 34
                                    

சாயங்காலம் சொன்னது போல அவர்கள் பெற்றோரை வீடியோ காலில் கூப்பிட்டார்கள்.முதலில் லைனில் வந்தது மஹாவின் பெற்றோர். தாயை காணவும் மகளின் கண்ணில் கண்ணீர் கசிந்தது.

"மாப்ள" என்று சிரித்து கொண்டே போனை எடுத்த பூரணியின் முகம் மகளின் கண்ணீரை காணவும் மாறியது. "என்ன மாப்ள எதுவும் பிரச்சனைங்களா?" என்று பதறினாள்.

"ம்..பஞ்சாயத்து தான்," என்று மூக்கை உறிஞ்சிய மகள் "இரு அவங்க அப்பாவும் அம்மாவும் லைனில் வரட்டும் அப்புறம் இருக்கு தீபாவளி" என்றாள் மகள் கண்ணை துடைத்து கொண்டு.

"ஏய்..நீ எதாவது எடுக்குமடக்கா பண்ணீட்டியா?அய்யோ" என்றாள் திகிளோடு.

"ம்ச், நான் எதுவும் பண்ணல, எல்லாம் விக்ரம் தான்" என்றாள் மகள் ஓரகண்ணில் விக்ரமை பார்த்து கொண்டே.

"ம்ச்..சும்மா இரு" என்று அவளை அமைதிபடுத்திய விக்ரம் "அத்தை மாமாவையும் லைனில் கூப்பிடுங்க. ப்ளீஸ்" என்றான்.

திகிலோடு அவள் லிங்கமூர்த்தியை கூப்பிட்டு அவர்கள் இருவரும் தெரிய ஆரம்பிக்கும் முன், ஆதித்யனார் லைனில் வந்தார். "என்ன தம்பி என்ன விஷயம்..விடியோ காலில்..என்னம்மா மஹா நீ எப்பிடி இருக்கே...அட உங்கப்பாவும் இருக்காங்களே..என்னங்க சம்பந்தி நல்லாயிருக்கீங்களா?" என்றார் வரிசையாக.

விக்ரம் மெலிதாக சிரித்து கொண்டு "அப்பா, அம்மாவையும் கூப்பிடுங்க.ஒரு விஷயம் பேசணும்..அதான்.' என்றான் தயக்கமாய்.

"ம்ம்..இரு தம்பி..இதோ கூப்பிடுகிறேன்..ஏ இந்தா அன்னம்..தம்பி வீடியோ காலில் கூப்பிட்டிருக்கான் பாரு..இங்க வா" என்றார்.

அவள் கையை துடைத்து கொண்டே, "என்ன திடீர்னு" என்றபடி அவர் அருகில் வந்து அமர்ந்தாள்.

மஹாவின் அழுத முகத்தை பார்த்து மகனை ஒரு மாதிரி பார்த்து, "ஒன்னும் பிரச்சனையில்லையே தம்பி?" என்றாள் எடுத்தவுடன்.

"அதெல்லாம் எதுவும் இல்லம்மா, உங்க எல்லார்கிட்டேயும் ஒரு விஷயம் சொல்லணும் அதான்.." என்றவன் மஹாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு கொஞ்சம் தயங்கிவிட்டு "நீங்க எல்லாரும்..ம்..தாத்தா பாட்டி ஆகிட்டீங்க" என்று சொல்லி முடித்தான்.மஹா துளிர்த்த கண்ணீருடன் அவன் தோளோடு ஒட்டி கொண்டு தாயை பார்த்தாள். பூரணீக்கு கண்ணீர் முட்டி மொபைலை லிங்கமூர்த்தியிடம் கொடுத்துவிட்டு அழுது கொண்டே எழுந்து போனாள்.

அன்புடை நெஞ்சம் கலந்தனவேWhere stories live. Discover now