அத்தியாயம் 25

3.1K 199 33
                                    

ஹைதிராபாத்தில் ஹேட்டலில் வந்து அவர்கள் விழுந்த போது மணி 9 ஐ தொட்டிருந்தது. இருவரும் போன் செய்து பெற்றோரிடம் வந்து சேர்ந்ததை பற்றி சொல்ல பேசினார்கள். இருவரும் மறுநாள் இல்லை எனில் ஞாயிற்று கிழமை பால் காய்ச்ச சொன்னார்கள். மஹா போனிலேயே அவள் தாயிடம் குதித்தாள். "அம்மா, ப்ளீஸ் டார்ச்சர் பண்ணாதே, லீவே ரெண்டு மூணு நாளு தான். எங்க வேலையை பார்க்க போகணும். ம்ம்..பார்க்கிறோம்." என்றபடி போனை வைத்தாள்.

"என்னாச்சு?" என்றான் விக்ரம்.

"வேற வேலை வெட்டி என்ன? சும்மா ..நாளைக்கு நல்ல நாளாம் அதைவிட்டா ஞாயிற்று கிழமை நல்லா இருக்காம் பால் காய்ச்ச டேட் சொல்லுறாங்க..ம்ச்..இப்ப தான் வந்திருக்கோம்..நாளைக்கு தான் வீடே பார்க்கணும் எப்பிடி நாளைக்கு பால் காய்ச்சுறது..சும்மா கடுப்பை கிளப்புறாங்க" என்று கடுகடுத்தாள் மஹா.

"ஒரு வேளை இன்னிக்கு வீடு ஃபிக்ஸ் பண்ணிட்டா, நாளைக்கு பால் காய்ச்சலாம் இல்ல, உனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லியே?" என்றான் அவன்.

தலையில் கை வைத்து கொண்டு "ம்..இது நம்ம ஸ்டேட் பாரு, நைட்டோட நைட்டா வீடு பார்க்க,ப்ளீஸ் ..ஏற்கனவே நான் எரிச்சலில் இருக்கேன் என்னை இன்னும் நீ வேற இரிடேட் பண்ணாதே" என்றாள் மஹா.

"இல்ல நிஜமா தான் சொல்லுறேன், இங்கே என்னோட இன்டஸ்ட்ரீ ப்ரெண்ட்ஸ் இருக்காங்க, நடிகை விதுனா இருக்காங்க இல்ல, அவங்க பேமிலி இங்க தான் இருக்காங்க, அந்த ஆன்டி தான் இன்னிக்கு நமக்கு கார் எல்லாம் அனுப்பி பிக் அப் பண்ணிக் கொண்டது அவங்களுக்கு தெரிஞ்சவங்க ஒருத்தர் ரெண்டு மூணு வீட்டோட வீடியோஸ் அனுப்பி இருக்காரு நீ பாரு எதாவது பிடிச்சா நாளைக்கே பால் காய்ச்சிடலாம்." என்றபடி வீடியோ இருந்த போனை நீட்டினான்.

போனை வாங்காமல் அவனை பார்த்தவள்."என்னை கொஞ்சம் மூச்சு விட விடுறியா ப்ளீஸ்.. எனக்கு தனிவீடும் வேண்டாம் , டபுள் பெட்ரூம் அப்பார்ட்மெண்ட்டும் வேண்டாம். நான் ஸ்டியோ அப்பார்ட்மெண்ட் இல்லாட்டி சிங்கிள் பெட்ரூம் அப்பார்ட்மெண்ட் தான் பார்க்கணும் என்று இருக்கேன், அப்பிடி எதாவது இதில் இருக்கா? அப்பிடி என்றால் பார்க்கலாம்..இல்லாட்டி எதுக்கு சும்மா டையத்தை வேஸ்ட் பண்ணீட்டு" என்றபடி அவனை போனை வாங்காமல் கையை கட்டி கொண்டு பார்த்தாள்.

அன்புடை நெஞ்சம் கலந்தனவேWhere stories live. Discover now