அத்தியாயம் 10

2.3K 193 18
                                    

"சார், அந்த பொண்ணு பயங்கர கான்பிடன்ட் ஆனா முதல்ல அவளை பார்க்கிற யாருக்கும் அது திமிர் மாதிரி தான் தெரியும். அப்புறம்.. ம்.. கொஞ்சம் யூனிக்கா இந்த கேரக்டர் டிசைன் செய்தால் நம்ம படம் இன்னும் நல்லா எலிவேட் ஆகும் சார்." என்றான் குமார். விக்ரமிடம் புதிதாய் சேர்ந்த அஸிஸ்டெண்ட். விக்ரமிற்கு ஏனோ ஒரு நொடி மஹா நினைவில் வந்து போனாள்.

விக்ரம், குமாரிடம் " நீ நல்லா தான் டிவலப் பண்ணிருக்கே, அப்பிடியே பிரேம் பண்ணு குமாரு நல்லா மூவ் ஆகும் தான் தோணுது." என்றான்.

"ம்ச்.. அதுகில்ல சார் இந்த மாதிரி யாராவது ரியல்லா தெரிஞ்சா அவங்க ரிசமளன்ஸா இந்த கேரக்டர் கொஞ்சம் பெட்டராக பில்ட் ஆகும் சார் ம்.. அதான் யோசிச்சு பார்க்கிறேன்.. எனக்கு தெரிஞ்சவங்க ஒருத்தரோட ப்ரண்ட் இந்த மாதிரின்னு சொல்லுவாரு அவரை பிடிச்சு பேசி பார்க்கிறேன் சார்" என்றவன் போனை எடுத்து கொண்டு வெளியே சென்றான்.

ஏனோ விக்ரமும் அவன் போனை எடுத்து மஹா நம்பரை எடுத்து யோசணையில் ஆழ்ந்தான். அவன் நினைவில், அவள் நடந்து வந்த கம்பீரமும், பேசிய பேச்சும், அவனை கடந்து சென்ற விதமும் என மொத்தமாய் அவள் வந்து நின்றாள்.

சிறிது நேரத்தில் குமார் வந்து சேர்ந்தான். முகத்தில் பெரிதாய் நம்பிக்கை துளிர்பில்லை. "என்னாச்சு குமார், உன் ப்ரெண்டு ஹெல்ப் பண்ண முடியாது என்று சொல்லீட்டாங்களா, ஏன் இது போய் டல்லா இருக்கே விடு பார்த்து கொள்ளலாம்." என்றான் சாதரணமாக.

விரக்தியாக சிரித்த குமார், "என் மூஞ்சில அவ்வளவு தெரியுதா சார், ம்ச்.. என்னவோ எனக்கு இதை ஒரு ரியல் கேரக்டர் மாதிரி செஞ்சா நல்லா இருக்கும் னு தோணுது சார்" என்றவன் சற்று யோசித்து விட்டு" ஏன் சார் உங்க சர்க்கிளில் யாராவது இந்த மாதிரி தெரிஞ்சவங்க.. ம்.. யாராவது இருப்பாங்களா? கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க சார்." என்றான் ஆர்வமாக.

மெலிதாக சிரித்தவன்" நீ இவ்வளவு டென்சன் ஆகும் அளவுக்கு நாம என்ன ஹிரோயினையா தேடுறோம், விடு அதெல்லாம் தன்னாலே கேரக்டர் பரேம் ஆகிக்கும்" என்று கூலாக கூறிவிட்டு ஸ்கிரிப்டை படிக்க ஆரம்பித்தான். அவனையும் அறியாமல் மஹா அவனின் கதாநாயகி ரூபமாய் மாறி நின்றிருந்தாள்.

அன்புடை நெஞ்சம் கலந்தனவேWhere stories live. Discover now