அத்தியாயம் 39

2.6K 180 25
                                    

அன்னம் தன் அறைக்கு வந்து படுக்க போகும் போது, ஆதித்யனார் "ஏ அன்னம்.. இன்னிக்கு நல்லாயிருந்தது இல்ல? ம்ஹூம்..ம்ச்..நான் பணத்தை தேடும் வேகத்தில் இதையெல்லாம் செய்ய நினைக்கவே இல்லை" என்றார். அந்த சின்ன சந்திப்பும் அந்த ஒரு நாள் சந்தோஷமும் அவரை அசைத்து இருந்தது அன்னம் அப்போதே உணர்ந்தாள்.

"ம்" என்று மெலிதாக சிரித்தாள் அன்னம் படுத்து கொண்டே.

"வயசுல நாம இப்பிடி இருக்காமே போயிட்டோம்..ம்ச்..உனக்கு எதாவது வேண்டும் என்றால் சொல்லு அன்னம்.நான் செய்கிறேன்." என்று அவளை திரும்பி பார்த்தார்.

அவரை விசித்திரமாக பார்த்தவள் "எனக்கு என்ன குறை? நான் தான் நல்லா இருக்கேனே.எனக்கு எதாவது வேணும் நான் சொல்லும் முன்னாடியே தான் நீங்க செய்து முடிச்சுவிடுவீங்களே.இன்னிக்கு நம்ம வீட்ல நடந்தது நமக்கு தான் புதுசு..எல்லாரும் இப்பிடி தான் அவங்க வீட்ல இருப்பாங்க.அதுக்கு என்ன பண்ணுவது? நீங்க சம்பாதிக்கணும் என்று ஓடினதுல இதை எல்லாம் நாம யோசிக்க முடியாமே போச்சு..ம்ச்..எனக்கும் நீங்க எதாவது சொல்லிடுவீங்களோன்னு செய்யாமே விட்டுடுடேன்.விடுங்க..நீங்க மாத்திரை எல்லாம் போட்டுடீங்களா?" என்றாள் அவள்.

"ம்ம்..எல்லாம் ஆச்சு..ம்ஹூம்..ஏன் அன்னம் உனக்கு நான் வேணா ஒரு வேளை சமைச்சு கொடுக்கட்டுமா ? இல்லாட்டி நாம நம்ம ஊருக்கு போய் ஒரு மாசம் இருந்துட்டு வருவோமா?" என்றார் அவர் விடாமல்.

"அட ..என்னத்துக்கு இப்ப இப்பிடி பேசிட்டு..பேசாமே தூங்குங்க" என்றாள் அன்னம்.

"இல்ல..என்னால உனக்கு வாய்க்கரிசி போடுவது எல்லாம் நினைக்க கூட முடியலை அன்னம். அதான்..என்னை முதல்ல அனுப்பிவிட்டுடு..ஏன்னா எனக்கு கத்தி கூப்பிடவாச்சும் நீ வேணும்" என்று மனைவியை பார்த்தார்.

அப்போதே உறைத்தவளாய் திடுக்கிட்டு அவரை பார்த்தவள், "தம்பி ரூமிற்கு வந்தீங்களா?" என்றாள் சற்று பயத்துடன்.
"ம்..மாடிக்கு லைட் ஆஃப் பண்ண வந்தேன்..ம்ஹூம்..நான் உன்னை பிடிச்சி தான் கட்டிகிட்டேன் அன்னம்..ம்ச்..கட்டிகிட்டதுக்கு அப்புறம் என் பிரியத்தை உன்கிட்ட சொல்லாமலே விட்டுடுடேன்..ம்ச்" என்றவர் குரலில் அத்தனை அமைதியும் நிதானமும் , குற்றஉணர்ச்சியும் கூடியிருந்தது நன்றாகவே தெரிந்தது அன்னத்திற்கு.
"இல்லங்க அது ஏதோ யோசிக்காமே பேசிட்டேன்..அதை போய் ..என்னை நீங்க ராணி மாதிரி வச்சிருக்கீங்க. காரு பங்களா வேலைக்கு ஆள் வேற என்ன வேணும் ஒரு பொம்பளைக்கு..பிள்ளங்க பிரியமா இருக்காங்க அப்புறம் என்னங்க..நான் தெரியாமே பேசிட்டேன் அதை போய் நீங்க யோசிட்டு ஏதேதோ பேசுறீங்க. நீங்க முதல்ல தூங்குங்க" என்றாள் சமாளித்து கொண்டு.
"நானும் இனி உன்னை நல்லா நடத்துறேன் அன்னம்..இன்னும் நமக்கு எவ்வளவு நாள் இருக்கு என்று தெரியவில்லை..அதுவரைக்கு என்னை கொஞ்சம் பொறுத்துக்கோ." என்றார்.
"என்னங்க நீங்க ஏதேதோ பேசிட்டு..விடுங்க..வாய் தவறி வார்த்தையை விட்டுட்டேன்..ம்ச்..நீங்க சொல்லுவது மாதிரி சமயத்துல எனக்கு கூரே இருக்க தான் இல்ல..ம்ச்..நமக்கு இன்னும் நிறைய வேலை மிச்சம் இருக்கும்.போட்டது போட்டபடி நம்ம போகவெல்லாம் முடியாது.ஆமா உங்க மக பேசிதையும் முழுசா கேட்டீங்களா? வாய் கொழுப்பு ரொம்ப ஜாஸ்தியாகிடுச்சு அவளுக்கு." என்றாள் சூழ்நிலையை இலகுவாக்கும் தொனியில்.
"ம்ம்..நல்லா விழுந்துச்சு.." என்று சிரித்தவர். "நல்ல பொண்ணு இல்ல..சம்மந்தி குடும்பமும் ரொம்ப நல்லவிதமா இருந்தாங்க அன்னம்..ம்ச்..உன்னையே நான் கவனிச்சு பார்க்கலே..ம்ச்..அவங்க எல்லாம்..ம்ஹூம்..பிள்ளங்களை இன்னும் நல்லா வளர்த்திருக்கணும் பேசிட்டு இருந்தாங்க..இந்த பெரியவன் சம்சாரம் சுமிதா கூட நல்ல பொண்ணு தான் இல்ல..மனுசங்க எல்லார்கிட்டே இன்னிக்கு ஒரு நாளில் ரொம்ப நெருங்கிட்ட மாதிரி இருக்கு அன்னம்." என்றார் அவர் மெய்யாகவே நெகிழ்ந்து போய்.
"இப்பிடி பேசிகிட்டே இருந்தா வர கொஞ்ச தூக்கமும் போயிடும், நீங்க பேசாமே தூங்குங்க." என்றவள் தன் பாட்டுக்கு திரும்பி படுத்தவள் சற்று நேரத்தில் உறங்கியும் போனாள்.பெரியவர் உறங்க நேரம் ஆனாலும் சந்தோஷத்தில் அவரும் கொஞ்ச நேரத்தில் மாத்திரை தாக்கத்தில் உறங்கி போனார்.

அன்புடை நெஞ்சம் கலந்தனவேWhere stories live. Discover now