அத்தியாயம் 15

2.4K 195 20
                                    

அன்று காலை பத்து மணி இருக்கும். மிகுந்த தயக்கத்துடன் தினா , ஆதித்யனாருக்கு போன் செய்தான்.

"சொல்லு தினேஷூ..என்ன எனக்கு கூப்பிட்டு இருக்கே? எப்போதும் தம்பி கூட தான் பேசுவே..இப்ப என்ன நான் ஞாபகத்துக்கு வந்திருக்கேன். என்ன தம்பி நான் எதுவும் ப்ரொடியூஸ் பண்ண போறேன்னு சொன்னானா என்ன?" என்றார் வேடிக்கையாக.

"ஏன் அங்கிள் அப்பிடி சொல்லுறீங்க? சும்மா கூட நான் உங்களுக்கு கூப்பிட கூடாதா என்ன?" என்றான் பேச்சை இழுப்பதற்காக.

"யாரு நீயா? சரி கூப்பிட்ட விஷயத்தை சொல்லு." என்று சிரித்தார்.

"லாஸ்ட் வீக் ஹைதிராபாத்தில் விக்ரம் திடீர்னு வர சொல்லி அந்த பொண்ணு கிட்ட கல்யாணம் பிக்ஸ் ஆகிடுச்சு சொல்ல சொன்னாரு..என்னனு கேட்டேன் பிடி கொடுத்து ஒண்ணும் பதில் சொல்லவில்லை அதான்..உங்கிட்ட சொல்லிடலாம் னு கூப்பிட்டேன் அங்கிள்" என்று மென்று முழுங்கி சொல்ல வந்ததை சொல்லி முடித்தான் தினா.

"ம்..ஓ..சரி தினா..நான் பேசி பார்க்கிறேன்..இதை நீயா தானே சொல்லுகிறாய் இல்ல தம்பி எங்க கிட்ட பேச தயக்கபட்டுகிட்டு உன்னை சொல்ல சொன்னானா?" என்றார் அந்த அனுபவஸ்தர்.

விக்கித்து தான் போனது தினேஷிற்கு இருந்தாலும் சமாளித்து கொண்டு "இல்ல அங்கிள், நானா தான் உங்க காதுல போடலாம்னு கூப்பிட்டேன், ஏற்கனவே அவரு ரொம்ப கஷ்ட பட்டுடாரு அதான் உங்க கிட்ட சொல்லிட்டா நீங்க அதை கரெக்டா ஹேண்டில் பண்ணிடுவீங்கன்னு தான்..." என்று இழுத்தான் அந்த சின்னவன்.

"சரி தினா நான் தம்பிக்கிட்ட பேசுறேன்..என்கிட்ட பேசினதை பத்தி எதுவும் சொல்லிக்க வேண்டாம் என்ன?" என்றார் பெரியவர்.

"சரி அங்கிள், ஃபீரியா இருந்தா நீங்களும் ஆன்டியும் ஒரு நாள் வீட்டுக்கு வாங்க அங்கிள்." என்றான் தினா.

"இந்த வயசுல நாங்க என்ன பிஸியா இருக்கோம்?நீங்க எல்லோரும் தான் பிஸியா இருக்கீங்க, நீயும் உன் வொய்ஃபும் நம்ம வீட்டுக்கு வந்து ரொம்ப நாளாச்சுல்ல நீங்க வாங்களேன்" என்றார் பெரியவர்.

அன்புடை நெஞ்சம் கலந்தனவேWhere stories live. Discover now