அத்தியாயம் 45

4.1K 181 85
                                    

அன்று காலை மலர்விழியும் அவள் கணவரும் பூ பழத்துடன் வாயெல்லாம் சிரிப்புடன் வந்திருந்தார்கள்.ஆதித்யனார் அவர்களை வரவேற்றுவிட்டு "என்னம்மா, கடைசியா போராடி உன் மருமகளை கண்டுபிடிச்சிட்டே போல" என்றார்.

"ம்..ஆமாப்பா..அடேங்கப்பா எவ்வளவு பொண்ணு பார்த்து..ம்ஹூம்..ஒரு வழியா அவனுக்கும் பிடிச்சு இருந்துச்சு இந்த பொண்ணு.. எல்லாம் முடிச்சாச்சுப்பா..முதன் முதல்ல உங்களுக்கும், அவன் மாமாவுக்கும் தானே பத்திரிகை வைக்கணும்..அதான் வந்தோம்..எங்கே விக்ரம் இருக்கானா? அவ இன்னும் கீழே வரலியோ" என்றாள்.

"நல்லது பேச வந்திருக்கே, இப்பிடி வம்பு பேசாமே , சாதாரணமா கேளு. மஹாவை பத்தி உனக்கு நல்லா தெரியும்ல" என்றாள் அன்னம்.

"ம்ம்..எனக்கு என்ன பயமா?..கூப்பிட்டு விடு..நாங்களும் கிளம்பணும்" என்றாள் மலரு.

"தம்பி வெளியே போனான், இங்க ஆபீஸில் இருக்கானான்னு கேட்கிறேன்." என்றபடி ஆதித்யனார் போனை போட்டார்.

சற்று நேரத்திற்குள் எல்லாம் மஹா குழந்தைகளுடன் கீழே வந்தாள்.மலரும் அவள் கணவரும் குழந்தைகளோடு விளையாடியபடி வந்த விவரம் சொன்னார்கள்.மஹா மகிழ்ந்து போனாள்.மலர் தாய் தகப்பனுக்கு பத்திரிகை வைத்துவிட்டு,மஹாவிடம் நீட்டினாள். அதற்குள் விக்ரம் வரவும், மஹா அவனை பார்த்து சிரித்துவிட்டு மலர் பக்கம் திரும்பி "ரெண்டு பேருக்கும் கொஞ்சம் வேலை இருக்கு அக்கா, அதனால முன்னாடியே சொல்லுறோம்னு நினைக்காதீங்க நாங்க கல்யாணத்துக்கு வர முடியாது" என்றாள் தெளிவாக.

மலரின் முகம் சிறுத்து போனது, தம்பியை கோபத்துடன் பார்த்து "என்னடா, அவளை பேச விட்டுட்டு வேடிக்கை பார்க்குறே. எனக்கு இருக்கிறது நீ ஒருத்தன் தான் இவ ஏன் இப்பிடி பேசுறா? என்னை கெஞ்சவிட்டு வேடிக்கை பார்க்கலாம்னு நினைக்கிறீங்களோ.?" என்றாள்.

விக்ரம் மஹாவை காணவும், மஹா மலரிடம் சலனமில்லாமல் "நீங்க கெஞ்சினாலும் நாங்க வரமுடியாது அக்கா,இவரு மட்டும் தான் உங்களுக்கு தம்பியா என்ன? ஏன் மித்ரண்ணா இல்ல, அவங்க எதிலே குறைஞ்சு போயிட்டாங்க. அவங்களை வச்சு கல்யாணத்தை முடிக்க வேண்டியது தானே." என்றாள் விடாமல்.

You've reached the end of published parts.

⏰ Last updated: Sep 27, 2020 ⏰

Add this story to your Library to get notified about new parts!

அன்புடை நெஞ்சம் கலந்தனவேWhere stories live. Discover now