அத்தியாயம் 36

3.2K 202 34
                                    

வீட்டில் பால்கனியில் நின்றிருந்த பூரணியிடம் வந்தார்கள் மகன்கள் இருவரும்.

"அம்மா, நம்ம கிளம்புவதற்கு முன்னாடி நம்ம மஹாவுக்கும் மாமாவுக்கும் சுத்தி வச்சிடுறீயா?" என்றான் வருண்.

"ஏன்டா? என்ன திடீர்னு?" என்றாள் அம்மா சிரித்து கொண்டே.

"மாமா ரொம்ப நல்ல மாதிரியா இருக்காங்கம்மா. எங்களை கூட்டிட்டு வரும் போது மாமாகிட்ட நம்ம மஹாவை கொஞ்சம் ஒரண்டு இழுகிற மாதிரி பேசினேன்.அவரு எவ்வளவு நாசுக்கா மஹாவை விட்டுகொடுக்காமே பேசினாரு தெரியுமா?..ம்ச் சூப்பர்மா.." என்று சிலாகிப்பாய் நின்றான்.

"நினைச்சேன், உங்க ரெண்டு பேருக்கும் வாயே அடங்காதா? சங்கடபட்டிருக்க போறாருடா.ம்ச்.. எதையாவது பேசி வைக்க வேண்டியது..கடவுளே." என்று சலித்து கொண்டாள் அன்னை.

"இல்லம்மா, அப்பிடி ஒன்னும் அவன் தப்பா எல்லாம் பேசலை, சும்மா தான் சொன்னான். மாமா கூட ஜாலியா தான் எடுத்துகிட்டாங்க." என்றான் பெரியவன் விஷ்ணு.

"ம்ஹூம்..பார்த்து பேசுங்கடா..நானும் தான் பாக்கிறேனே..மாப்ள கையுகுள்ள வச்சு தான் தாங்குறாரு நம்ம மஹாவை." என்று சிரித்தாள்.

"என்னை பத்தி என்ன பேச்சு?" என்றபடி வந்தாள் மஹா வீட்டிற்குள். பின்னாடியே வந்தான் விக்ரம்.

"அதுகுள்ள வாக்கிங் முடிச்சிட்டீயா?" என்றாள் அன்னை.

"கொஞ்சம் டயர்டா இருந்துச்சு அத்தே அதான் வந்திட்டோம்." என்றான் விக்ரம்.

"நீங்க படுக்க போங்க மாப்ள. நாளையில் இருந்து நீ எங்க கூட வாக்கிங் வா.. அவரே அசந்து போய் வராராரு அவரை போட்டு நச்சிக்கிட்டே இருக்கே" என்றவள் மகளை பார்த்தாள்.

"உன்னை எல்லாம் வர சொல்லிருக்கவே கூடாது..எப்பிடிடா இவங்களை மேற்கிறீங்க.ரொம்ப சந்தோஷம் போ.." என்றவள் கண்ணில் கண்ணீர் கூடியிருந்தது. நடந்து போய் கிட்சனில் தண்ணீரை குடித்து விட்டு ரூமிற்குள் சென்றாள் மஹா.

"அவ அப்பிடி தான் நீங்க போங்க மாப்ள, நான் பார்த்துகிறேன்" என்று அவள் நகர போகையில்.

அன்புடை நெஞ்சம் கலந்தனவேWo Geschichten leben. Entdecke jetzt