அத்தியாயம் 30

3.5K 190 29
                                    

மறுநாள் காலை ஹாலில் இருந்த விக்ரமிற்கு ஒரு கப்பில் காபி கொண்டு வந்தவள் தனக்கானதை குடித்து கொண்டே அவனிடம் ஒரு கப்பை நீட்டினாள். அவளை பார்த்தவன் "உன்னோட காபி தானே?" என்றான்.

அவனை பொய்யாய் முறைத்தவள், அவன் கப்பில் இருந்து ஒரு மடக்கு குடித்துவிட்டு அவனிடம் கொடுத்தாள்.

மெலிதாக சிரித்து கொண்டு வாங்கியவன், ஒரு மடக்கு குடித்துவிட்டு "ம்..இது சூப்பரா இருக்கு, நேற்று நல்லாவே இல்லை" என்று கண்ணை இறுக மூடி சிறுகுழந்தையை போல முகத்தை நீட்டினான்.

அவன் காதை திருகியவள் "அதுவும் நான் கலந்த காபி தான்." பொய்யாய் முறைத்தபடி.

"இருந்தாலும் இந்த டேஸ்ட் இல்லையே" என்று சிரித்து கொண்டே குடித்து முடித்து அவன் கப்பை கழுவி கொண்டே "அழகி, இன்னிக்கு என்ன ப்ளான்?" என்றான் விக்ரம்.

"ம்ச்.. இந்த இதையும் கழுவிவிடு..இன்னிக்கு லீவு தான்..வேணும்னா அந்த ஆன்டி இருக்காங்களான்னு கேளு அங்கே போயிட்டு வந்திடலாம்" என்றாள்.

ஒரு கையில் காபி கப்பை வாங்கியவன், மறுகையில் அவளை இழுத்து பிடித்தபடி "நாம ஏன் இங்கேயே?" என்றபடி முத்தமிட போனான்.

"ப்ராடு கொன்னுடுவேன் உன்ன" என்று அவன் கையை வேகமாக விலக்கி விட்டாள்.

அவனாவது விலகுவதுதாவது அவளை இழுத்து அவள் கன்னத்தில் முத்தம்மிட்டுவிட்டு "சாரி" என்றான்.

"கடவுளே, இன்னும் 4 சாரியும் 2 தேங்க்ஸூம் சொன்னா நாம எங்கேயும் வெளியே போக மாட்டோம்." என்றாள் தலையை சாய்த்து கொண்டு ஒரு புறம் இடுப்பில் கைவைத்து கொண்டு.

அவன் சிரித்து கொண்டு கழுவிய கப்பை கவிழ்த்து வைத்துவிட்டு கையை அருகில் இருந்த டவலில் கையை துடைத்து கொண்டே "ரொம்ப டார்ச்சர் பண்ணுறேனோ?" என்றான் அவளை பார்த்து.

"ம்ச்..இல்ல தங்கம் புடிச்சு தான் இருக்கு..ம்ச்..இருந்தாலும் ஒரு மாதிரி ஆபீஸ் வீடுன்னு இருக்கோமா..அதான் எங்கேயாவது நாம ரெண்டு பேரும் வெளியே போயிட்டு வரலாமேன்னு கேட்டேன்..உனக்கு வேண்டாம்னா வேண்டாம்" என்றபடி அவனை கட்டி கொண்டாள்.
"ம்ஹூம்.."என்று தானும் அவளை கட்டி கொண்டவன்."ஷூட் ஆரம்பிச்சுட்டா எனக்கு டயமே இருக்காது அழகி..அதான்..முடிஞ்ச அளவுக்கு உன் கூட டயம் ஸ்பென்ட் பண்ணலாம்னு நினைத்தேன்.வெளியே போகலாம்..இரு ஆன்டி கிட்ட கேட்கிறேன் அவங்க இல்லாட்டி நாம எங்கேயாவது ஒரு லாங் ட்ரைவ் போயிட்டு வரலாம்." என்றான்.

அன்புடை நெஞ்சம் கலந்தனவேWhere stories live. Discover now