அத்தியாயம் 22

2.7K 197 31
                                    

மகனின் அறைக்கு, மூச்சு வாங்க மாடி ஏறி வந்தாள் அன்னம். கதவு ஒறுகலித்து இருந்தது. மகன் மட்டும் சாய்ந்து கால் நீட்டி உட்கார்ந்தபடி மெலிதான சிரிப்புடன் மொபைல் பார்த்து கொண்டிருந்தான்.அவளை கண்ணில் பட்டாளில்லை. யோசனையுடன் கதவை மகனின் பேரை கூப்பிட்டு கொண்டு மெல்ல தட்டினாள்.

நினைவு கலைந்தவளாய் மஹா எழுகையில் கதவு திறந்தாள் அன்னம். அவளை பார்த்தவள் மகனை கண்டாள். "என்னம்மா? சொல்லுங்க, கூப்பிட்டிருந்தா நான் கீழே வந்திருப்பேனே" என்று மொபைலை அருகில் இருந்த டேபிளிலில் வைத்து விட்டு எழுந்தான்.

"இருக்கட்டும் தம்பி, இப்பிடி போனிலேயே இருந்தா நேரம் போறதே தெரியாது, நீங்க ரெண்டு பேரும் ஒரு அரைமணி நேரத்தில் ஹோட்டலுக்கு கிளம்பிடுங்க,அவளுக்கு மேக்கப் போடணும் இல்லே..ஆமா எப்போ வர சொல்லி இருக்காய் மேக்கப் போடுபவரை?" என்றாள் அன்னம்.

"நம்ம செல்வம் டீம் தான்மா, 5 மணிக்கு வர சொல்லிருக்கேன், ஆறுகுள்ள ரெடியாகிடலாம் சொன்னார்." என்றான் மகன்.

"சரி மணி நாலாக போகுது, நீங்க வேண்டியது எல்லாம் எடுத்துகிட்டு கிளம்பி போறதுக்கு சரியாக இருக்கும்" என்றவள் மஹாவை ஒரு மாதிரி பார்த்தாள். மேற்கொண்டு எதுவும் பேசாமல் திரும்ப போனவளை,"அம்மா" என்றாள் மஹா.

"ம்" என்றாள் மஹாவை பார்த்து சற்று இறுகிய முகத்துடன்.

"சாரிம்மா" என்றாள். மஹா அன்னத்தின் கண்களை பார்த்து.

மஹாவின் அருகில் சற்று தள்ளி நின்ற விக்ரமிற்கு எதற்கு என புரியாமல் அவளை பார்த்தான்." அன்னம் கேள்வியாய் அவளை பார்த்தாள்.

"காலையிலே மூகூர்த்த நேரத்தில் அந்த ஆசிரமத்தில் இருந்த வயசானவங்க எல்லாம் இந்த புடவை கொண்டு வந்து தந்தாங்க.ஆசிர்வாதம் வேண்டும் என்று தானே அங்கே போய் கல்யாணம் பண்ணிணோம்..அதான் இந்த புடவையையே கட்டிக்கிட்டேன்..எனக்கு தெரியும் உங்களுக்கு கஷ்டமா இருக்கும்னு..அதான் சாரி" என்றாள் மஹா சாரிக்கான காரணத்தை.

அன்புடை நெஞ்சம் கலந்தனவேWhere stories live. Discover now