அத்தியாயம் 9

2.3K 186 17
                                    

விக்ரம் வீடு போய் சேர்ந்து ஒரு வாரம் கழித்து அன்று காலை ரொம்ப நிதானமாக காபி கேட்டு விட்டு அருகில் இருந்த சோபாவில் அமர்ந்தான்.

அன்னை சிரித்து கொண்டு காபி கொடுத்து விட்டு, அவன் அருகில் அமர்ந்து"என்ன தம்பி, வேலை கொஞ்சம் ஒழிஞ்சிருச்சா, நிதானமா உட்கார்ந்து இருக்கே?" என்றாள் பிரியமாக.

"ம்.. அல்மோஸ்ட் மா.. இன்னிக்கு கொஞ்சம் லேட்டா வருகிறேன்னு சொல்லிட்டேன்" என்றபடி ரசித்து காபியை குடித்தான் மகன்.

"ஏன் தம்பி, நீ அந்த பொண்ணை பார்த்தீயா?" என்றாள் மெலிதாக.

" எந்த பொண்ணும்மா? " என்றான் நிஜமாகவே மஹாவை  மறந்த நிலையில்.

" அதான் தம்பி, அப்பா சொன்னாங்களே அந்த பொண்ணு. உன்னை அந்த ஊரில் பார்க்க சொன்னாங்களே, அது தான்." என்று எடுத்துக் கொடுத்தாள்.

"ம்..அந்த மஹாலக்ஷ்மி.. பார்த்தேன்மா, அப்பாவை தட்ட முடியாமல் தான் போனேன். பார்த்துட்டு வந்தேன், அவ்வளவு தான்" என்றான் மகன் காபியை குடித்துவிட்டு தம்ளரை டீப்பாயில் வைத்தபடி.

அந்த அப்பாவி அன்னைக்கு அப்போது நினைத்து கூட இருந்திருக்க மாட்டாள், தான் தான் தன் மகனின் நினைவுகளில் மஹா விதைக்கிறோம் என்று.

" பொண்ணு எப்பிடி? வயசு வேற கிட்டத்தட்ட உன் வயசு மாதிரி தான் சொன்னாங்க, ம்ச்.. உங்க அப்பா சொன்னா கேட்டா தானே, ஏதோ ஊரு உலகத்திலே இல்லாத அழகினு பார்த்தாலே ஆச்சுன்னு ஒரு புடியா நின்னுட்டாங்க, வந்தா அவளை பிடிக்கலைன்னு தெளிவாக சொல்லிடு" என்றவள் "உன்னை பார்க்க எப்பிடி வந்தா அந்த பொண்ணு? " என்றாள் அடுத்த கேள்வியை.

" வேண்டாம்னு சொல்ல போகிறோம், அந்த பொண்ணு எப்படி வந்தா என்னம்மா? "- விக்ரம்.

" ம்க்கும், உங்கப்பா கிட்ட அப்படி எல்லாம் பேச முடியாது தம்பி. அதுக்கு தான் கேட்கிறேன் சொல்லு தம்பி" என்றாள் மகனிடம் காரணமாக.

" ம்.. " என்று சற்று யோசித்தவன் "கவுன் போட்டு கிட்டு வந்தாங்க, படபட வென பேசுனாங்க. நான் எனக்கு கல்யாணத்துக்கு விருப்பம் இல்லைனு சொன்னேன், சரின்னு கேட்டு கிட்டு கடகட வென கிளம்பி போயிட்டாங்க. அவ்வளவு தான்மா. இதுல எங்க போய் எந்த காரணத்தை அப்பா கிட்ட சொல்லுவீங்க சொல்லுங்க " என்றான் நிஜமாகவே அம்மாவின் மனது தெரியாமல்.

அன்புடை நெஞ்சம் கலந்தனவேWhere stories live. Discover now