அத்தியாயம் 29

3.6K 208 44
                                    

சாமான்கள் வாங்கி நேரம் ஆனதால் வெளியேவே சாப்பிட்டு அவர்கள் வீடு வந்து சேரும் போது மணி மதியம் 2 ஐ தொட்டிருந்தது. மஹா அவள் பாடு வாங்கி வந்த சாமான்களை எடுத்து வைத்து கொண்டிருந்தாள். விக்ரம் அமைதியாக அவள் நடமாட்டத்தை பார்த்து கொண்டிருந்தான். எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு டயனிங் வந்தவள் ஒரு க்ளா தண்ணீர் ஊற்றி குடித்தபடி அவனை முறைத்தாள்.

அவன் எதுவும் பேசாமல் அவளை பார்த்து கை கட்டி கொண்டு அவள் எதிரில் நின்றான்.

"ஆடிகாரை வாசலில் கொண்டு வந்து நிறுத்திட்டா, அப்பிடியே நான் மயங்கி போயிடுவேன்னு நினைச்சியா? இல்ல எனக்கு நீ என்னை பத்தி என்ன நினைக்கிறேன்னே தெரியல..கொஞ்சம் அதை முதல்ல சொல்லு" என்றாள் நிதானமாக ஆனால் வேகமாக கேட்டாள்.

"ம்ஹும்..நான் செஞ்சது தப்பு தான், உன்கிட்ட அடிலீஸ்ட் கல்யாணத்துக்கு கொஞ்சம் முன்னாடியாவது நான் என்னோட ட்ரிப்ஸ் பத்தி சொல்லிருக்கணும்..ம்ச்..ஆனா..நான் இந்த அளவுக்கு ..எக்ஸ்பெக்ட் பண்ணவில்லை..சாரி" என்றான் அமைதியாக.

"ப்பா..என்ன ஒரு சரண்டர்..ம்ச்..செம டைரக்டர் சார்..நீங்க பேசாமே ஹீரோவா ட்ரை பண்ணுங்க" என்றாள் குதர்க்க சிரிப்புடன் கோபம் ஏறுவது தெரிந்தது.

"தேங்க்ஸ்..நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா?கோப படும் போது இதையும் சேர்த்துக்கோ..கோபம் வந்தால்.." என்றபடி குறுகுறுப்பாக பார்த்தான்.

சற்று உறைந்து போய் நின்றவள் "சொல்லு" என்றாள்.

"நாம தேங்க்ஸ் சொல்லிக்கிற மாதிரி, சாரிக்கு ஒன்று யோசிச்சேன்..சொல்லட்டுமா?" என்றான் மெதுவாக அவளை நோக்கி ஒரு அடி வைத்தபடி.

மஹாவிற்கு ஏனோ வலித்தது. தலையை குனிந்து கொண்டு "ம்.." என்றாள்.

அவன் அவளை நெருங்கி வந்து "சாரி" என்றபடி கண்ணத்தில் முத்தமிட்டான்.

மஹாவின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. அவனை நிமிர்ந்து பார்த்து "அப்ப் நான் இதுக்கு மட்டும் தானா விக்ரம்?" என்றாள்.

அன்புடை நெஞ்சம் கலந்தனவேWhere stories live. Discover now