அத்தியாயம் 44

3K 170 26
                                    

ஆதித்யனார் அன்று சாயங்காலம் காபி நேரத்தில் மஹாவிடம் "தம்பி, எப்போம்மா வருகிறான்.?" என்றார்.

"நைட்டிற்கு வந்திடுவாங்கப்பா" என்றாள் அவள்.

"அவன் எப்போ வருவானோ எப்பிடியோ நீயா தனியா பிள்ளைங்களை எப்பிடி பார்த்துக்குவே..வேணும்னா இன்னிக்கு பிள்ளைங்க ரெண்டு பேரும் எங்க கூட இருக்கட்டுமே." என்றார்.

சற்று துணுக்குற்றாலும் சமாளித்து கொண்டு "இல்லைப்பா அதெல்லாம் வேண்டாம் நான் பார்த்து கொள்வேன்" என்றாள் மஹா விடாமல்.

"ஏன்மா எங்க பேர பசங்க எங்க கூட ஒரு நாள் தூங்க கூடாதா?" என்றார் அவர் விடாமல்.

விநோதமாக கணவரை பார்த்து கொண்டே அருகில் வந்த அன்னம் "மாத்திரை போட்டா நமக்கு மறுநாள் தான் முழிப்பு வரும். அது ரெண்டும் சின்ன பிள்ளைங்க.அவளால சமாளிக்க முடியாட்டி நாம கீழே தானே இருக்கோம். நாம போய் பார்த்து கொள்வோம். அதுவும் முழிச்சி இருந்தா" என்றாள் அமர்த்தலாக.

"ம்க்கும்..இன்னிக்கு ஒரு நாள் பிள்ளைங்க கூட விளையாடிட்டு தூங்கி தான் பார்ப்போமே. தினமும் மாத்திரைல தான் தூக்கமே." என்று சலித்து கொண்டார் ஆதித்யனார்.

அன்னம் மலைப்பாய் அவரை பார்த்து விட்டு "சரி மஹா, நீ பிள்ளைங்களை கீழே கொண்டு வந்து விடு , இவரு என்ன தான் பண்ணுறாரு இன்னிக்குனு பார்ப்போம்." என்றாள்.

"அதுகில்லம்மா, எதுக்கு தேவையில்லாமே உங்க தூக்கத்தை கெடுத்துகிட்டு..நான் பார்த்துக்குவேன்மா..விக்ரம் வந்திடுவாரு. நாங்க மேனேஜ் பண்ணீடுவோம்." என்றாள் அவளும் விடாமல்.

"விடு மஹா பார்த்து கொள்வோம். இது ஒரு விஷயமா? விடு" என்றுவிட்டு அடுத்த வேலையை பார்க்க போனாள் பெரியவள். விக்ரம் இரவு 7க்கு எல்லாம் வந்து சேர்ந்தான்.

குழந்தைகள் கீழே விளையாடி கொண்டிருப்பதை பார்க்கவும் கூட விளையாட ஆரம்பித்தான்.சின்னவள் உறங்கி போகவும் பெரியவள் தாத்தாவோடு விளையாடிக் கொண்டே அவர் மீது படுத்து கொண்டாள்.வேறு வழியின்றி மஹா குழந்தைகளை பெரியவர்களிடம் விட்டுவிட்டு விக்ரமுடன் தங்கள் அறைக்கு சென்றாள்.

அன்புடை நெஞ்சம் கலந்தனவேWhere stories live. Discover now