அத்தியாயம் 31

3.1K 214 32
                                    

அடுத்து வந்த இரண்டு மாதங்களிலும் அவர்கள் இருவருமே ஒரு விதமான வாழ்க்கை முறைக்கு பழகி கொண்டார்கள்.அவன் தனது நேரமற்ற உழைப்பிற்கு நடுவில்,அவளோடு முடிந்த அளவு பொழுதை செலவு செய்ய பழகியிருந்தான்.அவள் தனது வேலைகளை சுருக்கி கொண்டு அவனோடு இருக்கும் தருணங்களுக்காக காத்திருந்து அழகு செய்தாள்.பத்து நாட்கள் பீச் புறத்தில் ஷூட்டிங் இருப்பதாய் கூறிவிட்டு விக்ரம் கிளம்பிச் சென்று அன்றோடு மூன்று நாள் முடிந்திருந்தது. ஏனோ அவளுக்கு அவன் நாட்களை செலுத்துவது கஷ்டமாய் தானிருந்தது. பொழுதை தள்ளிக் கொண்டு தான் திரிந்தாள்.ஆபீஸிலேயே பெரு நேரம் செலவழிக்க நினைத்தாலும், ஏனோ மனம் சோர்ந்து போயிருந்ததால் உடல் வீட்டை நோக்கி தான் ஓட சொல்லியது.ஆன்டி வீட்டு டிரைவர் தினமும் அவளுக்கு பிடித்த ஆடிக்காரில் காலையில் ஆபீஸில் விட்டு திரும்ப சாயங்காலம் கூப்பிட்டு வந்து வீடு சேர்த்துவிட்டு போனார்.

விக்ரம் அவள் ஆபீஸ் வந்து போனதில் இருந்தே அவளுக்கு ஆபீஸீல் சற்று மௌசு கூடித்தான் போயிருந்தது.அவளும் பெரிய பதவிக்கு மாறியிருந்தாள். வேலை வாங்குவது மட்டும் வேலையாகி போனாதால் இன்னும் பொழுது நிறைய இருப்பது போல இருந்தது.அன்று ஆபீஸில் இருக்கும் போது அவள் அம்மா கூப்பிட்டாள்.

"ம்..சொல்லு" என்றாள் மஹா.

"என்னடீ வேலை ஒன்றும் இல்லியா? ஒரு ரிங்கில் எடுத்துவிட்டே" என்றாள் அம்மா.

"ம்ச்.. ஒரே போரும்மா..இப்ப எனக்கு கீழே ஒரு டீமே இருக்கு, சொன்னா சொன்னதை செஞ்சு முடிச்சிடுவாங்க..ம்..நான் கடைசியில் போய் மங்கலம் மட்டும் தான் பாடணும்..இவனும் இல்லியா..ம்ச்..ரொம்ப மொக்கையா இருக்கு" என்றாள் மகள் சாதரணமாக.

"எவன்..ஏய் ..உனக்கு எத்தனை தடவை சொல்லுறது..ஒழுங்கா இரு மஹா..நீ இப்பிடி எல்லாம் பேசுறது தெரிஞ்சா அவங்க அப்பா அம்மா வருத்தப்பட போறாங்க. ஏற்கனவே கல்யாணத்துக்கு முன்னாடியே நீ அடிச்ச கூத்துக்கு அப்புறம் இப்ப வரைக்கு அவங்க எதுவும் பேசாமே இருக்கிறதே எனக்கு எப்பிடியோ திக்குதிக்கு தான் இருக்கு..இதெல்லாம் தெரிஞ்சா பெருசா எதாவது பிரச்சனை பண்ணிடப் போறாங்க. சரி மற்றபடி நீங்க ரெண்டு பேரும் நல்லாதானே இருக்கீங்க.?" என்றாள் அம்மா.

அன்புடை நெஞ்சம் கலந்தனவேWhere stories live. Discover now