அத்தியாயம் 40

3K 207 41
                                    

அடுத்த ஒரு மாசத்தில், மணி அவன் பெற்றோருடன் அன்று காலை விக்ரமின் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.மணியின் பெற்றவருக்கு வாயெல்லாம் பல்லாக இருந்தது.மணி மஹாவை காணவும் சற்று நேரம் தலை கவிழ்ந்து இருந்தவன் , எழுந்து அவளிடம் வந்து "சாரிக்கா, நான் உங்களை தப்பா நினைச்சிட்டேன். நீங்க நினைக்கிற அளவுக்கு நான் வொர்த் இல்லக்கா. என்னவோ உங்களை நான் ஆரம்பத்தில் இருந்தே தப்பாவே நினைத்துவிட்டேன்..சாரிக்கா. அன்னிக்கு நீங்க பேசினதை கேட்டேன். ம்ச்..எனக்கு ஹோப்பே இல்லை..ஆனா உங்களாலா தான் இன்னிக்கு எனக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகியிருக்கு." என்றான் தயங்கி தயங்கி.
"ம்ம்..ஆகா அதை சொல்ல தான் வந்திருக்கே இல்ல?" என்றாள் மஹா நக்கலாக.
மணியின் தாய், "அது இல்லம்மா, அவனுக்கு மூகூர்த்த புடவை நீ எடுத்து கொடுத்தா சந்தோஷ படுவான்." என்றாள் பாந்தமாக.
"அய்யய்யே பொண்ணுக்கு தானே புடவை எடுப்பாங்க, உன் கல்யாணத்திலே நீ கட்டிக்க போறீயா?" என்றாள் நக்கலாக.
பொய்யாக அவளை முறைத்தான் மணி. விக்ரம் அங்கே வந்து எல்லோரையும் வரவேற்றுவிட்டு தானும் அவர்களுடன் உட்கார்ந்தான்.
"ம்..சொல்லு தம்பி, உனக்கா உன் வீட்டம்மாவுக்கா யாருக்கு புடவை எடுக்கணும்?" என்றாள் மஹா விடாமல்.
மணி விக்ரமை பார்த்து "சார், இவ்வளவு நாள் கலாய்ச்சதுக்கு சாரி கேட்டுட்டேன் சார். பாருங்க சார் இன்னும் வச்சு செய்யுறாங்க. இப்ப புரியுது சார் நீங்க ஏன் எல்லாத்துக்கு சிரிக்கிறீங்கன்னு..ம்ஹூம் பயங்கரமான எஸ்கேப் டெக்னிக் சார்." என்றான் மணி.
எல்லோரும் அவன் முகபாவனையை பார்த்து சிரித்து விட்டனர்.
"சரி விடுங்கப்பா ரொம்பவும் கல்யாண மாப்பிள்ளையை ஓட்ட கூடாது. நீ சொல்லு மணி அப்புறம் என்ன சொல்லுறாங்க பொண்ணு வீட்டுல" என்றார் ஆதித்யனார்.
"அவங்களுக்கு, நம்ம மஹா கண்ணு பேசினதில் , நாளபின்னே பிரச்சனை வந்தா கூட மஹா இருக்கு, சரி பண்ணீடும் ஒரு நம்பிக்கை. அதான் ரொம்ப சந்தோஷம்" என்றார் மணியின் அப்பா.
"சரி, மூகூர்த்த புடவை எடுத்தா எனக்கு என்ன கிடைக்கும், அதை தெளிவா சொல்லு தம்பி." என்றாள் மஹா , அன்னம் அருகில் சென்று நின்று கொண்டு.
"என்னக்கா, உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க, நான் செய்யுறேன்." என்றான் மணி.
"ம்ஹூம்..மாப்பிள்ளை விட்டா பல்டி கூட அடிப்பாரு போலவே" என்றாள் மஹா.
வெட்கமாய் மணி சிரித்தான். "ரெண்டு நாளில் காஞ்சிபுரம் போகலாம்னு இருக்கோம்மா, நீ வர முடியுமான்னு கேட்டுட்டு கல்யாணம் முடிவானதை சொல்லிவிட்டு போகலாம் தான் வந்தோம்." என்றாள் மணியின் தாய்.
"போகலாமே" என்றாள் மஹா அன்னத்தை பார்த்தபடி. இரு பெண்களுக்கு முகமெல்லாம் பிரகாசித்தது. ஆதித்யனாரும் விக்ரமும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு பெண்களை பார்த்தனர். இருவரும் திருட்டு முழி முழிக்கவும். விக்ரம் மணியிடம் "போனில் போட்டோஸ் அனுப்பி செலக்ட் பண்ணிடலாமே, இல்லை மஹா இந்த நேரத்தில் ட்ரவல் பண்ணணுமா யோசிக்கிறோம்." என்றான் விக்ரம்.
"சார், அக்காவுக்கு எப்ப முடியுமோ அப்ப புடவை எடுத்துக்கலாம் சார். என் லைப்பில் நீங்களும் அக்காவும் ரொம்ப முக்கியம் சார். நீங்க ரெண்டு பேரும் வந்தா தான் எனக்கு கல்யாணமே சார்." என்றான் மணி.
அவனை பெற்றோர் மென்று முழுங்கி கொண்டு எல்லோரையும் பார்க்கவும் ஆதித்யனார் "கொஞ்சம் ஜாக்கிரதையா அழைச்சிட்டு போகணும் மணி." என்றார்.
"கண்டிப்பா சார்.அம்மாவையும் அக்காவையும் பத்திரமா கொண்டு வந்து விட்டுடுறேன் சார்." என்றான் மணி விக்ரமையும் ஆதித்யனாரையும் பார்த்து.
சற்று நேரத்தில் அவர்கள் செல்லவும் ஆதித்யனார் ,அன்னத்திடம் "அது தான் சின்ன பொண்ணு புரியாமே பேசுது, உனக்கு என்ன புடவை துணிமணி இல்லாமேயா நிக்கிறே.அது இருக்க நிலைமைக்கு புத்தி சொல்லுவியா, அதை விட்டுட்டு அது கூட சேர்ந்து கூத்தாடுறே." என்றார்.
"ம்..ஏதோ புள்ளதாச்சி ஆசை படுறா, அது தான் நானும் துணைக்கு போகபோறேனே அப்புறம் என்ன? வேணுனா வேண்டாம்னு சொல்லிடுங்க அவ்வளவு தானே." என்றாள் அன்னம்.
"ம்..நீ ரொம்ப நல்லவ தான் போ..சரி ஜாக்கிரதையா போயிட்டு வாங்க" என்றார்.
அன்னம் முகத்தை தோளில் இடித்து கொண்டு நகர்ந்தாள்.
அடுத்து வந்த நாளில் மணி சொன்னதை போலவே அலுங்காமல் கூட்டி சென்றான். ஷாப்பிங் முடியும் நேரத்தில் விக்ரம் அவனது ஆடிக்காரில் வந்து சேர்ந்தான்.
"சார் என்னாச்சு சார்?" என்றான் மணி.
"ம்..வேலை முடிஞ்சிருச்சு மணி அதான், அதுவும் இல்லாமே இவ்வளவு நேரம் நீ பார்த்து கொண்டதே பெரிய விஷயமில்லையா? அதான் நானே கூட்டிட்டு போயிடலாம் என்று வந்துவிட்டேன்." என்றான் விக்ரம்.
மணி சிரித்து கொண்டு அவர்களை வழியனுப்பினான்.காரில் சற்று தூரம் போகவும் விக்ரம் தாயிடம் ஒரு சின்ன பாட்டிலை நீட்டி "அம்மா , இளநீர் இருக்கு குடிங்க" என்றான்.
அடுத்த தாக மஹாவிடம் ஒரு பாட்டிலை நீட்டி "ம்.. நீயும் குடி" என்றான்.
"ம்..பார்த்தீங்களாம்மா அம்மாவுக்கு மட்டும் நான் எதுவும் சொல்லுவேன்னு எனக்கும் கிடைச்சிருக்கு இளநீர்" என்றாள் மஹா.
"ம்ஹூம்..அடிப்பாவி..உன்னை குடிக்க வைக்க தான் அவன எனக்கு கொடுத்ததே." என்றாள் பதிலுக்கு அன்னம்.
சற்று பேசிக் கொண்டு இருந்தாலும் இருவருமே சிறிது நேரத்தில் உறங்கி போனார்கள்.வீடு வந்து சேரவும் முதலில் விக்ரம் தாயை எழுப்பினான். அவள் சற்று பொறுத்து இறங்கவும் "பார்த்து ஜாக்கிரதையா அவளை ரூமிற்கு கூட்டிட்டு போ தம்பி" என்றுவிட்டு பெரியவள் மெதுவாய் நடந்து உள்ளே சென்றாள்.
மெதுவாய் மஹாவை எழுப்பி அவளை அழைத்து கொண்டு மாடி அறைக்கு சென்றான் விக்ரம். அசதியில் அவளும் படுத்து உறங்கி போனாள்.
அடுத்து வந்த சில மாதத்தில் மஹாவை வீட்டிற்கு அழைத்து செல்ல வந்தார்கள். எல்லாம் பேசி முடித்து கிளம்ப போகையில் இப்போது வருகிறேன் என்றுவிட்டு மாடிக்கு சென்ற மஹா நேரம் சென்றும் வராமல் போகவே விக்ரம் தான் பார்த்து வருவதாய் மேலே வந்தான்.
"ஓய் அழகி..என்ன இங்க வந்து உட்கார்ந்து இருக்கே? என்னாச்சு பயமா இருக்கா?" என்றான்.
"எதுக்கு பயம்? அதெல்லாம் ஒன்னுமில்லை..ஆமா நீ டெய்லி என்னை பார்க்க வருவீயா? ம்ச்.." என்றாள்.
"கண்டிப்பா வருவேன். தினமும் காலையில் இருந்து மூணு வேளையும் உன் கூட தான் சாப்பாடு போதுமா? இதை கேட்க தான் இங்கேயே இருந்தியா?" என்றான் அவள் அருகில் உட்கார்ந்து அவளை அணைத்தபடி.
"ம்ச்.. உனக்கு கேட்க பிடிக்காதுன்னு சொன்னே..ஆனா எனக்கு சொல்லணும் போல இருக்கு,,ஹூம்..ஐ லவ் யூ தங்கம்." என்றவள் அவன் பேச எத்தனிக்கும் முன் அவன் இதழில் இறுக்கமாய் முத்தமிட்டாள்.
அவளிடம் இருந்து மெலிதாய் சிரித்தவனிடம் "சாரி" என்றுவிட்டு "உனக்கு பிடிக்காதுன்னு தெரியும் பேசாமே திருப்பி கொடுத்திடு" என்றாள்.
"எதை?" என்றான் அவன்.
"ம்..நான் சொன்னதை தான்" என்றாள் அவள் அவனை ஓர கண்ணில் பார்த்தபடி.
"வேண்டாம் நானே வைத்து கொள்கிறேன்,இப்பவாவது கீழே போகலாமா?" என்றான் சிரித்து கொண்டு விக்ரம்.
"என் தங்ககுட்டிடா நீ..வா போகலாம்" என்றபடி,அவனோடு கீழே இறங்கி தன் பெற்றோருடன் தன் வீடு வந்து சேர்ந்தாள்.
அடுத்து வந்த நாளில் விக்ரம் சொன்னதை போல தினமும் மூன்று வேளையும் மஹாவுடனே சாப்பிட வரவும் பூரணிக்கு சந்தோஷம் கொள்ளாமல் போயிற்று.
அடுத்த நாளில் பெரியவரும் அன்னமும் கூட மஹா இல்லாமல் வீடு வெறிச்சோடி போனதாய் சொல்லி பின்னாடியே வந்து சேர்ந்ததும் அவளுக்கு தாளாமல் தான் போனது வேலைக்கு மேலும் ஆள் சேர்த்து அவர்களுக்கு ஒரு குறையும் இல்லாமல் பார்த்து கொண்டார்கள்.
ஆனாலும் அன்னம் வீட்டு மனுஷி போலகொஞ்சம் உதவியும் செய்யவே உச்சி குளிர்ந்து போனது பூரணிக்கு.
அன்று சாயங்காலமே முகத்தை வைத்து இரு பெண்களும் கண்டறிந்து துரிதப்படுத்தி. ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்தனர். அவர்கள் நினைத்தது போலவே மறுநாள் விடியலில் பிரசவம் ஆகும் என டாக்டரும் சொல்லவும் மொத்த குடும்பமும் ஆஸ்பத்திரியில் இருந்தது.ஆண்களை எல்லாம் வீட்டுக்கு போக சொன்னால் அன்னம். விக்ரம் விடாமல் "நீங்க எல்லோரும் போங்கம்மா, எல்லாருக்கும் தூக்கம் போயிடும், எதுவும் என்றால் நான் பார்த்து கொள்கிறேன்." என்று விஷ்ணுவை மட்டும் நிறுத்திக் கொண்டு எல்லோரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு அங்கிருந்த சேரில் அமர்ந்தான்.
அருகில் வந்தமர்ந்த விஷ்ணு "பயமா இருக்கா மாமா, பயப்படாதீங்க அவளுக்கு ஒன்றும் ஆகாது." என்றான்.
"ம்ச்..ம்ச்..எனக்கு பயமெல்லாம் இல்லை விஷ்ணு, இந்த குழந்தை உன் அக்காவோட தவம், அதை அவ சரியா முடிச்சிடுவான்னு எனக்கு தெரியும்..என்ன அவ வலி தாங்க மாட்டா அதான் சீ செக்‌ஷன் பண்ண சொல்லலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்" என்றான் விக்ரம்.
சற்று விக்ரமை பார்த்து மலைத்தவன் "டாக்டர் கிட்ட கேட்டு பாருங்க மாமா" என்றான் மச்சினன்.
டாக்டரிடம் பேசியதில் அவளும் தேவைபட்டால் மட்டும் ஆப்ரேஷன் செய்ய முடியும் என் கூறவும் வேறு வழியின்றி காத்திருந்தான் விக்ரம்.விடியும் வேளையில் சுகபிரசத்திலேயே அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தாள் மஹா. அசதியில் அயர்ந்து இருந்த மஹாவை பார்த்து கொண்டே மகளை கையேந்தினான். அவனுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது அடுத்த தாக எல்லோருக்கும் கூப்பிட்டு விவரம் கூறி வரும் நேரம் பற்றி கூறினான்.குடும்பமும் அவனை அறிந்தவர்களும் சந்தோஷத்தில் கூத்தாடி கொண்டிருந்தனர்.

அன்புடை நெஞ்சம் கலந்தனவேWhere stories live. Discover now