அத்தியாயம் 11

2.3K 182 7
                                    

"ம்.. போல்டா வா.. சரி.. அதுக்கு முன்னாடி இதுக்கு பதில் சொல்லுங்க ஜி" என்று பதில் அனுப்பினாள் மஹா.
"கேளுங்க" என்று பதில் அனுப்பினான் அவன்.
"நீங்க இப்போ இருக்க இடத்தில் எதாவது பிரச்னையில் மாட்டிகிட்டா, உங்க முயற்சியில் அந்த பிரச்சினையை விட்டு வெளியே வர முடியவில்லை என்றால் என்ன செய்வீங்க" - அவள்.
" ம்.. இங்க எங்கப்பா, அண்ணன், ப்ரெண்ட்ஸ் எல்லாரும் இருக்காங்க, ஸோ அவங்க ஹெல்ப் எடுத்துப்பேன்" - அவன்.
" ம்.. இதே அவங்க யாருமே சுத்தி இல்லாட்டி அப்ப என்ன செய்வீங்க" - அவள்.
" நானே எப்படியாவது சமாளிச்சுகிட்டு வந்துடுவேன். ஏன் கேட்கிறீங்க" - அவன் புரியாமல்.
"இப்படி தான் எல்லாருமே போல்ட் ஆகுறாங்க. அது ஒரு நீடு மொமெண்ட் ஜி. தண்ணீக்கு உள்ள விழுந்தாச்சு, கையையும் காலையும் அசைச்சா தான் உயிரோடு இருக்க முடியும்னா, அதை யாருமே செய்வாங்க. அக்கம்பக்கம் ஆள் இருந்தா யாராவது நம்மள காப்பாத்திடனும் பயந்துகிட்டே வேண்டிகிட்டு தான் இருப்போம்." - அவள்.
" யா நீங்க சொல்லுவது கரெக்ட்ங்க"- என்றான் அவன் தெளிந்தவனாய்.
" நா படபடவென பேசுறதுனாலே தானே எங்கிட்டே ஐடியா கேட்கலாம்னு நினைச்சீங்க. இந்த ஊருல நான் இப்படி இருந்தால் தான் பொழைக்க முடியும் அதான். நிஜத்தில் நான் பயங்கர பயந்தாகோளி.. வலிக்காத மாதிரியே பிலிம் போட்டு சமாளிச்சுடுவேன். ஹிஹிஹி.. " என்றாள் அவள்.
"ம்.. கரெக்ட்டா புடிச்சுட்டீங்க ஹா.. ஹா.. ஹா.. "என்றான் அவன்.
மேலும் மேலும் மெசேஜ் வாயிலாகவே பேச்சு வளர்ந்தது. இருவருக்கும் ஏனோ போன் வாயிலாக பேசிக் கொள்ள தோன்றவில்லை. இவர்களின் இந்த மெசேஜ் பரிவர்த்தனை எவருக்கும் தெரியவும் இல்லை , இருவரும் அதை வெளியில் சொல்லவும் இல்லை. ஆனால் இருவரும் அவர்களை அறியாமல் ஒரு நட்பு வட்டத்திற்குள் சென்று இருந்தார்கள். பிடித்தது பிடிக்காதது பேச ஆரம்பித்து இருந்தார்கள்.
அன்று காலையில் அன்னம் காப்பி சாப்பிட வந்த மகனிடம் "தம்பி, அந்த பொண்ணு இல்ல, நம்ம ராகவி போட்டோ அனுப்பி இருக்காங்க, இன்னிக்கு நாள் நல்லா இருக்கு அதனால கோவிலில் வச்சு பார்த்துக்கலாம் பேசிருக்கோம். இன்னிக்கு வேலையை சீக்கிரம் முடித்து விட்டு வந்தாயெனில் நம்ம கோவிலுக்கு ஒரு எட்டு போய் பார்த்திடலாம்." என்றாள் கோர்வையாக.
பேப்பர் படித்து கொண்டிருந்த ஆதித்யனார் நடப்பதை கண்டும் காணாமல் பேப்பரில் முழ்கியிருந்தார்.
"பொண்ணு பார்க்கிறதா? என்னம்மா நீங்க? " என்றான் முகத்தில் அருவருப்புடன்.
" என்ன தம்பி நீ, பொண்ணு பார்க்காமே எப்படி கல்யாணம் முடிவு பண்ணுறது"- என்றாள் அம்மா லாஜிக்கை பிடித்த சந்தோஷத்தில்.
மகன் அமைதியாக இருக்கவும் கணவனை துணைக்கு அழைத்தாள். தகப்பன் தன்னை பார்ப்பதை காணவும்," எனக்கு கொஞ்சம் வேலை இருக்குப்பா, வர கொஞ்சம் லேட்டாகும்.. அதான் வேணா இன்னொரு நாள் பார்க்கலாமே" என்று முழுங்கினான்.
" சரி தம்பி, நாங்க அவங்க கிட்ட சொல்லிடுறோம். நீ உன் வேலையை பாரு" என்றார் தகப்பனார்.
அன்னத்திற்கு ஸ்ருதி இறங்கி தான் போனது. விக்ரம் அந்த இடத்தில் தப்பித்த நிம்மதியுடன் தன் அறைக்கு சென்றான். அவன் அறிந்திருக்கவில்லை அவனை பெற்றோர் எத்தனை அடி பாயுவார்கள் என்று.
இரவு அவன் வீடு வந்து சேரும் போது மணி 8.45 ஐ தொட்டு இருந்தது. அவன் உள்ளே நுழைந்ததும் அன்னம் "இதோ தம்பி வந்தாச்சே, வா தம்பி வா எல்லாரும் உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க" என்று அவனை எல்லாரும் இருந்த அந்த லவுன்ச்சில் கொண்டு போய் நிறுத்தினாள். விக்ரம் அதிர்ந்து தான் போனான். பெண்ணும் பெண்வீட்டாரும் அவனுக்காக காத்திருந்தார்கள்.
"அம்மா என்னம்மா, இவங்க.. " என்று முடிக்கும் முன் அவர்களை காணவும் மெலிதாக சிரித்து கொண்டு" நா.. நான் இதை எக்ஸ்பெக்ட் பண்ணவில்லை அதான்" என்று மென்று முழுங்கினான்.
அங்கே இருந்தவர் பெண்ணின் அப்பா போல, ஆரம்பித்தார் "நாங்களும் கூட வேற நாளில் பார்க்கலாம்னு தான் சொன்னோம், அம்மா அப்பா தான் நாளை கடத்த வேண்டாம்னு சொன்னாங்க, அதான்" என்று இழுத்தார்.
அந்த பெண் ராகவி, பாந்தமாய் வெட்க சிரிப்பு இல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். விக்ரம் செய்வதறியாது தவிபபாய் தகப்பனை பார்த்தான். அவர் புரிந்தவராய்" விக்ரம் நீ வேணா போய் ப்ரெஷ் பண்ணிக்கிட்டு வாயேன்"என்றார்.
அதற்காக காத்திருநதவன் போல "சரிப்பா, இதோ வந்திடுறேன்" என்றவாறு எழுந்து மாடியில் இருந்த தன் அறைக்குள் சென்று கட்டிலில் விழுந்தான்.
சில நிமிடங்களில் எழுந்து முகம் கழுவி  வேறு சட்டை மாற்றி தலை சீவி கொண்டிருந்தான். கதவு தட்டும் ஓசை கேட்டது."வரேன்ம்மா" என்றபடி கதவை  திறந்தான்.
அங்கே நின்றிருந்தது ராகவி, விக்ரம் திணறினாலும் "நா.. இதோ வரேன்" என்றவாறு சீப்பை வைத்து விட்டு மேற்கொண்டு அவன் அஅறை தெரியாதவாறு கதவை மூடிவிட்டு வெளியே வந்தான்.
"இல்ல டைம் ஆகிடுச்சு, அதான் உங்ககிட்ட பேசிட்டு போகலாம்னு வந்தேன். "என்றாள் ராகவி.
"சொல்லுங்க, ம்.. கீழே போகலாமா ?" என்றான்.
"இல்ல தனியா பேசலாம்னு தான் இங்க வந்தேன், இங்கே டெரஸ் இல்லாட்டி பால்கனி எதாவது.." என்று இழுத்தாள்.
"மாடிக்கு போகலாம் வாங்க" என்றபடி அழைத்து சென்றான்.
" சொல்லுங்க" என்றான் அமைதியாக.
" எனக்கு, இந்த கல்யாணத்தில் எந்த அப்ஜெக்ஷனும் இல்ல, ஆனா அந்த ரவீணா இனி உங்க லைப்ல எந்த சந்தர்ப்பத்திலும் வர மாட்டாங்க கிற உத்திரவாதம் மட்டும் எனக்கு வேணும்" என்றாள் நேரிடையாக.
விக்ரமிற்கு ரவீணாவின் பெயரே எரிச்சலை ஏற்படுத்தியது.
" ம்.." என்றான் வழக்கம் போல அமைதியாக.
" நீங்க ரொம்ப அமைதியான டைப்னு சொன்னாங்க, இவ்வளவு அமைதி என்று நான் நினைக்கவில்லை, காலேஜ் விட்டு வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் கூட நான் தான் பேசனும் போல" என்று சிரித்தாள்.
மெலிதாக சிரித்தவன் "நான் இன்னும் அடுத்த லைப்க்கு தயாராகவில்லை, ஸோ.. எனக்கு யோசிக்க கொஞ்சம் டயம் வேணும்"என்றான் அதே அமைதியுடன்.
அவள் அதை எதிர்பார்க்கவில்லை, சற்று தடுமாறி விட்டு" ஓ.. ம்.. அப்ப கீழே கேட்டா.. "என்றாள்.
" இதே சொல்லலாம், கொஞ்சம் பேசி பார்த்துட்டு அப்புறம் பிடிக்குதா இல்லியான்னு சொல்லுறோம்னு.. ம்.. உங்களுக்கு எதாவது அப்ஜெக்ஷன் இருக்கா? "என்றான்.
அவனின் அமைதிக்கு பின் இருந்த தீர்க்கம் அவள் எதிர்பாராதது. "ம்.. அ.. அதுவும் கரெக்ட் தான் நாம ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சுக்கவும் டயம் வேணும் இல்லியா? "என்றபடி வேறு எங்கோ பார்த்தாள்.
அவன்" நாம கீழே போகலாமா? "என்று கேட்டான்.
ம்.. என்றவாறு இருவரும் கீழே இறங்கி வந்து பேசி வைத்தபடி சொல்லவும் பெரியவர்கள் நெளிந்தாலும் டயத்திற்கு ஒப்பு கொண்டார்கள்.
விக்ரம் அங்கே மேற்கொண்டு ஏதும் பேசாமல் தன் அறைக்குள் சென்று புகுந்து கொண்டான்.
ஏனோ அந்த பெண் பேசியது அவனுக்கு பிடிக்காமல் போனது.
ஏனோ போனை பார்த்து கொண்டு இருந்தான். வேண்டி காத்திருந்தது போல வந்து சேர்ந்தது மஹாவின் மெசேஜ்.
"ஜி, எப்படி இருக்கீங்க? ரொம்ப பிஸியா?" - அவள்.
"இல்லீங்க, அவ்வளவு பிஸி இல்ல.. இன்னிக்கு மட்டும் கொஞ்சம்.." - அவன்.
"இன்னிக்கு என்ன ஸ்பெஷல் ஜி, சொல்லலாம்னா சொல்லுங்க" - அவள்.
"ம்ஹூம்.. ஒரு பொண்ணு என்னை பார்க்க வந்திருநதாங்க.. அதான்." - அவன்.
"ஹாஹாஹா.. வழக்கம் போல அவங்களுக்கு எனக்கு கொடுத்த பல்பா.. ஹாஹா "-அவள்.
" ம்ச்.. உங்க கிட்ட சொன்னதை தான் அவங்க கிட்ட சொன்னேன். ம்ச்.. என்னோட விருப்பம் அவங்களுக்கு ஒரு பொருட்டாவே இல்ல. ம்ஹூம்.. என் பேரண்ட்ஸூக்காக  தான் யோசிக்கிறேன்." - அவன்.
" ஏன் ஜி நான் கேட்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க.. ஏன் இன்னிக்கு பார்த்த பொண்ணு உங்களுக்கு சரியானவங்களா இருக்க மாட்டாங்கனு தோணுது. " - அவள்.
" ம்ஹூம்.. " - அவன்.
" உங்களை விட்டுட்டு போன பொண்ணுக்கு நீங்க ஏன் இவ்வளவு இம்பார்டன்ஸ் கொடுக்குறீங்க" - அவள்.
"சொல்ல தெரியலைங்க.. மறுபடியும் கல்யாணம்.. இந்த வயசில்.. என் கேரக்டரே அசிங்கமா ஆயிட்ட மாதிரி.. ம்ச்.. " - அவன்.
" அய்யய்யா.. ஜி.. நீங்க நல்லவரா இருந்தா  உங்களுக்கு யாராவது ஊருக்கு நடுவிலே சிலை வைக்கிறேன் சொன்னாங்களா என்ன? உங்களை பத்தி யோசிக்க கூட யாருக்கும் நேரமில்லைஜி. உங்க படத்தை கூட நெட்டில் பிடிச்சதை பார்த்துட்டு பிடிக்காதது ஓட்டிட்டு தான் பார்ப்பாங்க. இருக்க வாழ்க்கையை உங்களுக்கு பிடிச்ச மாதிரி வாழறதுக்கு யோசிங்க ஜி" - அவள்.
"இந்த மெசேஜ் படிக்கிறதுக்கு நல்லா இருக்கு. ஆனா என்னாலே மாற தான் முடியுமானு தெரியவில்லை. ம்.. உங்களுக்கு என் நிலைமை வந்தா தான் தெரியும் "- அவன்.
" அய்யோ.. ஜி. உங்களுக்கு அப்புறம் நா கூட ரெண்டு பேருக்கு அப்பீட் கொடுத்து இருக்கேன் அது தெரியுமா உங்களுக்கு ?? " - அவள்.
" ம்.. நீங்க ஒருத்தரை ஓகே பண்ணிருக்கலாமே.. ஏன்?? "-அவன் .
" ம்.. எனக்கு நல்ல மனசு இல்ல ஜி, ஒரு பக்கி பானிபூரில பை டூ ல மீட்டிங் முடிச்சுட்டு போறான். இனனொன்னு அவன் லோனை நான் கட்டுவேனான் எதிர்பார்த்தான்... யப்பா "-அவள்.
"ஹா ஹா ஹா.. சரிங்க குட் நைட்.. பார்க்கலாம்" - அவன்.
அந்த மெசேஜிற்கு பிறகு அவளிடம் இருந்து பதிலில்லை, ஆனால் விக்ரமிற்கு மனசு லேசாக ஆனது போல இருந்தது. ராகவியிடம் பேசி பார்க்கலாம் என்று தோன்றியது. அதை  நினைத்து கொண்டே உறங்கியும் போனான்.

அன்புடை நெஞ்சம் கலந்தனவேWhere stories live. Discover now