அத்தியாயம் 20

2.4K 196 25
                                    

மஹாவின் ஆசைப்படி கல்யாணம் ஆசிரமத்தில் வைப்பதாய் முடிவானது. மஹா பிடித்த பிடிவாதத்தால் புடவை கூட அவளுக்கு ரெண்டு தான் விக்ரம் வீட்டாரால் வாங்க முடிந்தது.அவள் பிடிவாதத்தை பார்த்து விக்ரமின் அக்கா மலர்விழி மலைத்து போயிருந்தாள். சற்று கோபமாக இருந்தவள் ,சிரிப்பு காணாமல் தான் போயிருந்தது. தகப்பனிடம் முட்டியும் பார்த்தாள்.

"ஏன்பா, அப்பிடி என்ன உலகமகா அழகின்னு இவளை பிடிச்சிருக்கு அவனுக்கு? இதுக்கு அவன் தனியாவே இருக்கலாம். அவளுக்கு கொஞ்சம் கூட மட்டு மரியாதை இல்லை." என்றாள் மகள் வீரஆவேசமாக.

"ஏய்..என்னத்தை சொன்னே நீ அவகிட்ட?" என்று மனைவியை அதட்டினார் ஆதித்யனார்.

"நான் எதுவும் சொல்லலை, ஏற்கனவே பேசினதை பிடிச்சுகிட்டு பேசுறா" என்றவள் மகளிடம் "ஏய்..இந்தா எல்லாம் முடிவு பண்ணி முகூர்த்த புடவை கூட எடுத்தாச்சு..இப்ப போய் எதுக்கு இதெல்லாம் பேசுறே.அவ தான் உன் தம்பி பொண்டாட்டி, அவ்வளவு தான்." என்றவள் மலர்விழியின் கணவர் முருகானந்தத்தை காணவும் "வாங்க மாப்பிள்ளை" என்று அழைத்தாள். அவர் வருவாய்துறையில் பெரிய பதவியில் இருப்பவர். அதனாலே பெரியவர் பிள்ளைகள் இருவரையும் வருமானத்தை ஒழுங்காக முதலீடு செய்ய வைத்துவிடுவார். சமயங்களில் மாப்பிள்ளையிடம் யோசனை கேட்டு செய்வதும் உண்டு. "என்ன மாமா நல்லா இருக்கீங்களா?" என்றபடி வந்தார் முருகானந்தம்.

"வாங்க மாப்பிள்ளை,நல்லா இருக்கேன் நீங்க எப்பிடி இருக்கீங்க? எங்கே அகிலை காணோம்" என்றார் பேரனை தேடியபடி.

அகில் அந்த வீட்டின் மூத்த பேரன், அவனுக்கு 24 வயது, லண்டனில் படிப்பு முடித்து வேலையும் கிடைத்துவிட்டது.வேலைக்கு சேரும் முன் இந்தியா வந்திருந்தான். விக்ரமின் கல்யாணம் முடிவானதில் கலந்து கொள்ளலாம் என்று குஷியாக இருப்பவன்.

"காரை பார்க் பண்ணீட்டு இருக்கான் மாமா, இப்ப வந்திருவான். அப்புறம் பொண்ணு போட்டோ இருக்கா மாமா, ஒன்றும் சொல்லாமே கடகடவென முடிவு பண்ணிட்டீங்க" என்றார் முருகானந்தம்.

அன்புடை நெஞ்சம் கலந்தனவேWhere stories live. Discover now