அத்தியாயம் 28

3K 198 42
                                    

இருவரும் அவரவர் பாடு கிளம்பி கொண்டிருந்தார்கள். விக்ரம் மெதுவாக "நான் கார் புக் பண்ணி இருக்கேன், உன்னை ஆபீஸில் விட்டுட்டு போகிறேன்" என்றான் அமைதியாக.

"தேங்க்ஸ் நான் பார்த்து கொள்கிறேன், நான் இன்னிக்கு எதுவும் குக் பண்ணவில்லை, நீ வெளியே சாப்பிட்டு கொள்" என்றாள் அவள் பதிலுக்கு.

"அட்லீஸ்ட் லிப்ட்டில் ரெண்டு பேரும் ஒன்றாக போகலாமே ?" என்றான்.

ஏதோ யோசித்தபடி, கிளம்பிய பின் அவனுக்காக சிறிது நேரம் நின்றாள்.

அவன் வந்ததும் இருவரும் கிளம்பி லிப்ட்டில் பேஸ்மென்ட் வந்தார்கள்.

அங்கே அந்த ஆடிக்காரும் அதனை விட  வந்தவர்களும் நின்றிருந்தார்கள்.

மஹா நடப்பது தெரியாமல் முழிக்கும் போதே, அந்த ஆள் விக்ரமுடன் கை குலுக்கினான் "இவங்க தான் மஹாலக்ஷ்மி" என்றான் அவர்களிடம்.

"கன்கிராட்ஸ் மேம், யுவர் கிஃப்ட்" என்று விட்டு அட்டையில் ஆன அந்த பெரிய சாவியை கொடுத்தான்.

மஹா விக்ரமை பார்த்தாள், அவன் எப்போதும் போல சிரித்து கொண்டு "வாங்கிக்க, இது என்னுடைய கிஃப்ட் ஃபார் யூ" என்றான்.

வெளியாள் முன்பு எதுவும் பேச கூடாது என்று வரவழைக்கப்பட்ட சிரிப்புடன் வாங்கி கொண்டாள் அவள். போட்டோ எடுத்தார்கள். விக்ரம் ரெஜிஸ்ட்ரேசன் பற்றி அவர்களிடம் பேசிவிட்டு யாரிடமோ பேசுவதாய் கூறிவிட்டு அவர்களை அனுப்பி வைக்கும் முன் மஹாவையும் அமர வைத்து விட்டு, தானும் காரில் அமர்ந்து இருந்தான்.

மஹா அவனை முறைத்தாள். அவன் காரை எடுத்தான். அவள் கம்பெனி பெயரை மேப்பிள் போடவும் அது வழி காட்ட ஆரம்பித்தது.  ஒரு பெரு மூச்சுடன் "நமக்கு இங்கே கார் வேணும் இல்லியா, அதான் இப்ப நான் படம் பண்ணுற ப்ரொடியுசர்க்கு இங்கே ஆடி சோரூம் இருக்கு, எப்படியும் நான் பாதி ப்ளாக்கா வாங்குற மாதிரி இருக்கும் ஸோ காராய் கொடுக்க சொல்லி கேட்டேன் அனுப்பிட்டார்." என்றான் அவள் காதிலேயே ஏற்றி கொண்டாளில்லை. எங்கோ பார்த்து கொண்டு உட்கார்ந்து இருந்தாள்.

அன்புடை நெஞ்சம் கலந்தனவேWhere stories live. Discover now