அத்தியாயம் 2

2.9K 175 6
                                    

அது விக்ரமாதிய்யாவின் வீடு.அம்மா அன்னம்மாள், பேருக்கு ஏற்றாற் போல வீட்டிற்கு வரும் யாரையும் பட்டினியோடு அனுப்ப விரும்ப மாட்டாள். இருப்பதில் இயன்றதை கொடுப்பவள்.அப்பா ஆதித்தனார் பெரும் பேர் பெற்றவர். சினிமா துறையில், அவர் நுழையாத துறையில் மகன் ஆர்வம் என கூறவும் ஆனந்தத்துடன் பயிற்சி எடுத்து கொள்ள அனுமதித்தார். அவன் அம்மாவிற்கு தான் சற்று தயக்கமாக இருந்தது. விக்ரம் அவளை போல அமைதியானவன் , யார் மனமும் புண்படுத்த தெரியாதவன், ரொம்பவும் பொறுத்து போகும் குணம். கோபமே படதெரியாது. சிறுவயதிலேயே அப்படி தான், எதையாவது ஆசைபட்டு கேட்டால் இல்லை என்று பெற்றோர் சொன்னால் சரி என்று கேட்டு கொள்ளும் குணம் உண்டு. இத்தனை நாளும் பெருமை கொடுத்த குணம் அத்தனையும் அவளுக்கு அவன் இந்த துறைக்கு போக ஆசை என்றதும் அவளுக்கு சற்று கலகத்தை உண்டு செய்தது தான். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவனுக்கு பயிற்சி கொடுத்த பெரிய டைரக்டரே அவனை பல மேடைகளில் புகழ்வதை கேட்கவும் சற்று நிம்மதியாக தான் இருந்தது

அவனும் தனியாக வெளியே வந்து அடுதடுத்து நிறைய படங்கள் இயக்கினான்.அவன் படங்களுக்கு என ஒரு ரசிகர் வட்டம் உருவாகியிருந்தது. அப்போது தான் தன் அடுத்த படத்தின் கதைக்காக ஒரு புது முகம் ஹீரோயினை தேடினான்.அப்போது தான் ரவீணாவின் புகைப்படம் அவனுக்கு கிடைத்தது.முதல் பார்வையிலே ஏனோ அவள் படம் அவனை ஈர்த்தது. நேரில் அழைத்து பேசிப் பார்த்தான். அவள் இவன் பேசும் தன்மை , வேலை நேர்த்தி என எல்லாவற்றையும் புகழ்ந்து தள்ளினாள். அது அத்தனையும் வாய்ப்புக்காக் என அறியாமல் அவனும் அவள் வலையில் விழுந்தான். அந்த படத்திற்கு பிறகு அவளுக்கு வந்த வாய்ப்புகள் எல்லாவற்றையும் பற்றி அவனிடம் பேசி அவன் கருத்தை கேட்ட பிறகே ஒப்புக் கொண்டாள். அதனாலே சினிமா துறையில் இவர்கள் இருவர் பற்றி கிசுகிசு பரவ ஆரம்பித்தது. அவள் அதையும் ஒரு கருவியாக்கி கொண்டு படங்களில் பிஸியாக ஆரம்பித்தாள்.

எந்த நாளும் மகன் ,ரவீணா பற்றி பேசியதில் இருந்தே அவனுக்கு அவளை ரொம்பவும் பிடித்து போனது பெற்றோருக்கு புரிந்திருந்தது. ஒரு நாள் ரவீணாவை அழைத்து வர செய்து நேரில் விருப்பம் கேட்க நினைத்திருந்தார்கள் பெரியவர்கள் இருவரும். அதற்குள்ளே மகன் அவளிடம் காதலை கூறி சம்மதம் வாங்கியிருந்தான். அன்று வீட்டிற்கு வந்தாள் ரவீணா.

அன்புடை நெஞ்சம் கலந்தனவேWhere stories live. Discover now