அத்தியாயம் 19

2.5K 185 32
                                    

"தேங்க்ஸ் ஃபார் கம்மிங்..நான் கேக் கட் பண்ணலாமா?" என்றாள் மஹா.

"ஓ..தாரளமா கட் பண்ணுங்க, நாங்க உங்களை தவிர வேற யாருக்கு வெயிட் பண்ணுறோம்னு நினைக்கிறீங்க" என்றான் மணி வேகமாக.

தினா அவனை கிள்ளிவிட்டு,மஹாவை பார்த்து "அவன் கிடக்கிறான், நேத்து அடிச்சது இன்னும் கொஞ்சம் இருக்கு..அதான்..நீங்க கேக்கை கட் பண்ணுங்க சிஸ்டர்" என்றான்.

எல்லோரும் பிறந்தநாள் வாழ்த்து பாட கேக்கை கட் செய்தாள். திடீரென அன்னை முன்னே வந்து "வாங்க" என்றாள்.

மஹா மெலிதாக சிரித்து விட்டு கேக்கை எடுத்து "இந்தாம்மா" என்றாள். தன் பின்னால் நிற்பது யாரென தெரிந்தும் திரும்பாமல்.

"ஏய்..பாரு மாப்ள" என்றதும் "என்னது?" என்றாள் மகள்.

"இல்லடீ..பின்னால பாரு மாப்ள வந்திருக்காரு? நீ அவருக்கு குடு" என்றவள் "நீங்க முன்னாடி வாங்க வந்து கேக்கை வாங்கிக்கோங்க" என்றாள் விக்ரமிடம்.

மஹா திரும்பாமல் அன்னையை பார்த்தபடி நின்றாள்.விக்ரம் அவள் முன் வந்தான்.அவனது முகத்தில் ஒரு மெலிதான சிரிப்பு இருந்தது."ஹேப்பி பர்த்டேங்க" என்றான்.

"தேங்க்ஸ்" என்று மெலிதாய் சிரித்தவள், தாயிடம் கேக்கை நீட்டினாள்.

அவள் கண்களால் விக்ரமிற்கு கொடுக்கும்படி செய்கை காட்டினாள். வேறு வழியில்லாமல் விக்ரமின் கையில் நீட்டினாள்.அவனும் அவளிடம் இருந்து கேக்கை பாதி வாங்கி கொண்டான். "தேங்க்ஸ்" என்றான்.

மணி ,தினா காதில் "ஜி, இப்பிடி ஒரு பிறந்தநாளை என் ஜென்மத்துக்கு பார்த்தது இல்லை..யப்பா..என்ன லவ்வு..அடக்கன்றாவியே இதை பார்க்க நான் வராமலே இருந்திருக்கலாம்" என்றான்.

"ச்சு..சும்மா இரு" என்றான் அவனும் அதே தொனியில்.

எல்லோருக்கும் கைகளில் கேக்கை கட் செய்து கொடுத்தவள் தாய்க்கு மட்டும் ஊட்டினாள்.விக்ரம் சிரித்து கொண்டு எல்லோருடனும் இருந்தவன், மஹாவின் பெற்றோரிடம் "ஒரு ஒன் ஹவர் மஹாவை நான் வெளியே கூட்டிட்டு போகலாமா,நீங்க ஓகேன்னா.." என்று இழுத்தான்.

அன்புடை நெஞ்சம் கலந்தனவேWhere stories live. Discover now