அத்தியாயம் 1

5K 178 13
                                    

மொபைல் அடித்தது, மஹா சற்று அசந்து தான் போயிருந்தாள். கூப்பிட்டது அம்மா பூரணி தான்.

"ம்..சொல்லும்மா" என்றாள் சுரத்தையில்லாமல் மகள்.

"என்ன, சமையல் எல்லாம் முடிஞ்சுதா? ரெண்டு பேரும் சாப்புட்டீங்களா?" என்றாள் அவள் சாதாரணமாக.

"ம்..நான் சாப்பிட்டேன்" என்றாள் மகள் விட்டேத்தியாக.

"ஏன், அவரு எங்க போனாரு? வெளியே போயிருக்காரா? எப்ப போனாரு?" என்றாள் அடுக்கடுக்கா கேள்வி கேட்டாள்.

"ம்..காலையிலே அவங்க அப்பா கூப்பிட்டாரு எங்கேயோ போகணும்னு சொல்லி வர சொல்லிருக்காங்க, போயிருக்காங்க" என்றாள் மஹா.

"திரும்பி வந்துருவாரா? போன தடவை மாதிரி அங்க அவங்க இவரை பிடிச்சி வச்சுகிட்டு சீன் போட்டு நீ அவங்க வீட்டுக்கு வந்தா தான் அனுப்புவோம்னு சொல்ல மாட்டாங்களே" என்றாள் கவலை தோய்ந்த குரலில்.

"ம்..சொல்லுவாங்க,வாங்கி குடுத்த வேலையில ஒழுங்கா இருக்காமே, வேலையை விட்டுட்டு வந்த பையனை , கஷ்டமா இருந்த வீட்ல இருடா, நாங்க சோறு போடுறோம்னு சொன்னவங்க தானே, கண்டிப்பா இருக்க தான் சொல்லு வாங்க.ரெண்டு வருஷமா நான் தான் சோறு போட்டு , வீட்டு வாடகைனு எல்லாம் பார்க்குறேன்.வேலைக்கு போறதுக்கு முன்னாடி இந்தாளை சாப்பிட வச்சு, நான் கிளம்பி போயிட்டு வந்து..ச்சே..எனக்கு ரொம்ப விட்டு போகுதும்மா..எப்ப தான் எனக்கு விடியுமோ..ம்ஹூம்..சொல்லி தான் அனுப்பியிருக்கேன், திரும்பி வராட்டி போலீசில் என் புருஷனை கானோம்னு கம்பிளைன்ட் பண்ணுவேன்னு சொல்லி தான் அனுப்பி இருக்கேன் ..பார்ப்போம்" என்றாள் தீர்க்கமாக.

"இன்னும் எவ்வளவு நாள் தான் நீயும் இப்பிடி பொருத்து பொருத்து போவியோ, புள்ள பொறந்து இருந்தாலும் பரவாயில்லைனு பொறுத்து போகலாம்..என்ன கர்ம்மமோ?" என்றபடி சலித்து கொண்டாள்.

"ம்..ரெண்டு பேரும் எதிரெதிரா உட்கார்ந்து ஒருத்தரை ஒருத்தர் பார்த்தா புள்ள பிறக்காது, குடும்பம் நடத்தணும் அப்ப தான் பிறக்கும்" என்றாள் மஹா.

அன்புடை நெஞ்சம் கலந்தனவேWhere stories live. Discover now