அத்தியாயம் 43

2.8K 171 29
                                    

விக்ரம் பூர்ணாவுடன் ரூமிற்குள் உள்ளே நுழையவும் சின்ன மகள் குதித்தாள்.மஹா, ரூமின் கதவை சாற்றிவிட்டு, அங்கிருந்தபடியே நின்று கொண்டே அவனை ஆராய்ந்தாள்.ரெண்டு கைகளிலும் காயம் பாதி உறைந்து காய்ந்த நிலையில் இருந்தது.கட்டில் பெரியவளுடன் உட்கார்ந்தவன் "அச்சுச்சோ..என் தங்ககுட்டி எல்லாம் எப்போ வந்தீங்க?..ம்ம்.."என்று பெரியவளை உட்கார்த்தி வைத்து கொண்டு சின்னவளை தூக்கி கொஞ்சினான். மஹா எதுவும் பேசாமல் அவனை பார்த்து கொண்டே நிற்பதை காணவும் "எனக்கு ஒன்றும் இல்ல அழகி,காயம் கூட காய்ந்து போயிடுச்சு. இந்த குமாருக்கு சும்மா வாயிருக்க மாட்டாமே போன் பண்ணிட்டான். அதுக்காக பசங்களை தனியா தூக்கிட்டு இப்பிடியா கிளம்பி வருவே?" என்றான்.

'என்ன?' என்பது போல கேள்வியாக அவனை பார்த்தாள்.

"சரி எல்லாரும் சாப்பிட்டீங்களா?, எத்தனை மணிக்கு வந்தீங்க? கொஞ்சம் குட்டியை பிடிச்சுக்கோ, நான் இதோ வருகிறேன்" என்றபடி அவள் பதிலுக்கு காத்திராமல் கட்டிலை விட்டு இறங்கினான்.

அவன் முகம் கை கால் கழுவி விட்டு வந்து சேரும் போது மஹா மகள்கள் இருவரையும் படுக்க வைத்து இருந்தாள்.ரெண்டும் தூங்க முயற்சித்து கொண்டிருந்தது. அவன் அவர்களை பார்த்து சிரித்த படி இரு மகள்களுக்கும் முத்தம் கொடுத்துவிட்டு அவனுக்கு அவளுக்கு உணவு ஆர்டர் செய்தான்.

அவள் எதுவும் பேசாமல் மகள்கள் இருவரையும் தூங்க வைத்து முடிக்கவும் சாப்பாடு வரவும் சரியாக இருந்தது. அவன் வாங்கி இருவருக்கும் தட்டில் பரிமாறிவிட்டு அவளை அழைத்தான்.அவனை முறைத்து கொண்டேஅவன் அருகில் வந்து உட்கார்ந்தாள்.அவன் அந்த தோசையை பிய்த்து சாம்பாரில் தோய்த்து அவளுக்கு ஊட்ட அவள் வாயருகில் வைத்து "வாயை திற என்கிட்ட சண்ட போட எனர்ஜி வேணும் இல்ல, எவ்வளவு நேரம் தான் முறைச்சு கிட்டே இருப்பே?" எனவும் அவள் வாயை திறந்தாள் அவன் ஊட்டினான்.

ரெண்டொரு வாய் வாங்கவும் "நீ சாப்பிடு, மத்தியாணம் எல்லாம் ஒழுங்க சாப்பிட்டீயா?" என்றாள் மஹா.

அன்புடை நெஞ்சம் கலந்தனவேWhere stories live. Discover now