போட்டி 2# 12 - வரமா? சாபமா?

51 9 2
                                    


ENTRY 12:

திரும்பிய திசையெங்கும் நிறைந்த பச்சை எங்கே?

செழித்து வளர்ந்த வயல் வெலிகள் எங்கே?

எங்கும் புரண்டோடிய தண்ணீர், கானல் நீரோ?

வாழ்வெங்கும் நிறைந்த இன்பம், நிரந்தரம் தானோ?

மருந்தான உணவு விஷமானதேனோ?


சுட்டெரிக்கும் சூரியன் வரமா, சாபமா?

வீசும் புயலும், கொட்டும் மழையும் வரமா, சாபமா?

விளைந்த அக்கால தூய உணவெங்கே?

முளைத்த அப்பச்சிளம் பயிர்கள் இப்போதெங்கே?

 தண்ணீர் கண்ணீரானது வரமோ?

செம்மண் தரிசானது வரமோ?

கலப்பின உணவுகள் வரமோ?

கலக்கும் இரசாயனங்கள் வரமோ?


இயந்திரமயமான உலகில், வலிய உழவனும், 

                        உழவுத்தொழிலும் வெறும் மாயை தானோ? 

அழிந்து வரும் உலகில், காப்பாற்ற வேண்டியது 

                       மனித உயிரோ? உழவோ?

இக்கால உழவு நமக்கு வரமா, சாபமா?

*********************

Contest EntriesWhere stories live. Discover now