போட்டி 6 # 5 - பாட்டா இல்ல கதையா?

112 10 14
                                    

ஏய் ரித்தி!! சீக்கிரம் எழுந்திரு ஸ்கூல்க்கு லேட் ஆகுது!!" என்று ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த தன் மகளை தட்டி எழுப்பினார் மரகதம்.

'ச்ச!! இந்த அம்மா கனவுல கூட சாக்லெட் சாப்பிட விடமாட்டிராங்க' என்று மனதினுள்ளேயே சலித்துக் கொண்டு தன் சாக்லெட் கனவிற்கு பிரியா விடை கொடுத்து கண் விழித்தாள் ரித்தி.

"சீக்கிரம் போய் பிரஷ் பண்ணிட்டு வா. மணி ஏழாகுது இன்னும் அரை மணி நேரத்துல ஸ்கூல் பஸ் வந்திடும்!!" என்று தூக்கம் தெளிந்தும் தெளியாத மகளை பாத்ரூமில் நுழைத்தார் மரகதம்.

ரித்தி பாரதி நிகேதின் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். மிகவும் சுட்டி, புத்திசாளியும் கூட. அவளது தந்தை பம்பாயில் வேலை செய்கிறார். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே வீட்டிற்க்கு வருவார். அவர்களது கூட்டுக் குடும்பம் என்பதால் மனைவி மற்றும் மகளின் பாதுகாப்பு பற்றிய கவலை இல்லை அவருக்கு.

ரித்தி தன் தாத்தா பாட்டி பாசத்தில் மிகவும் குறும்பு செய்யும் குழந்தையாகவே வளர்ந்தால்.

ஒரு வழியாக பல் துளக்கி குளித்து முடித்து வந்த மகளுக்கு ஸ்கூல் உடை அணிவித்து உணவூட்டி புறப்பட வைத்தார் மரகதம்.

ஸ்கூல் பேக் மாட்டி பஸ் ஸ்டாப்பிற்கு புறப்பட்ட பின் தான் அவளுக்கு நினைவு வந்தது தான் நேற்று கொடுத்த கணக்கு வீட்டுப் பாடம் செய்யவில்லை என்று.

"அம்மா நா ஸ்கூல்க்கு போமாட்டேன்" என்றுவிட்டு தன் அறையினுள் சென்று தாழிட்டு கொண்டாள்.

மரகததிர்கு ஒன்றும் புரியவில்லை.

"ரித்தி என்னாச்சி? ஏன் ஸ்கூல் போகமாட்டன்ற? மொதல்ல வெளிய வா!!"-மரகதம்.

"போம்மா வெளிய வந்தா நீ ஸ்கூல்க்கு அனுப்பிடுவ!! நான் மேக்ஸ் ஹோம் வர்க் செய்யல, எங்க ஹிட்லர் மிஸ் பணிஷ் பண்ணிடுவாங்க. நான் ஸ்கூல் போமாட்டேன் " என்று மழலை குரலில் சினுங்கினாள் ரித்தி.

இவளை எவ்வாறு வெளியே வர வைப்பது என்று யோசித்தார் மரகதம்.
அவருக்கு ஓர் வழிகிட்டியது.

Contest EntriesWhere stories live. Discover now