போட்டி 5 # 7 - மாலை பொழுதின் கீதம்

70 13 4
                                    


புத்தாண்டின் படிக்கல் பனிரெண்டில் படும் பொழுது,

என் பாலைவனமே புன்னகை பூத்து படர்ந்தது!

வண்ண வண்ண விண்மீன்கள் வானில் வெடிக்க,

உன் வருகைக்காகவே விழிகள் வலம் வந்தது!

கலக்கல் கானங்களிலும் கடிகார கூச்சலிலும்,

உன் காதல் கீதமே காதோரம் கனமாய் கசிந்தது.

செல்வச் செழிப்பில் சொக்கியும் சிதறாத சிந்தனை,

உன் சிரிப்பு சிறையின் சிலிர்ப்பில் சிந்தி சிதைந்தது!

மாலை முழுதும் மணாளன் மது மயக்கத்தில் மன்றாட,

உன் மந்திர மௌனத்தில் மனம் மூழ்கி மடிந்தது!

தேடல் தீர்ந்த தருணம், தோழனின் திமிரடங்கிய தசைகளை

என் துப்பட்டா தீண்ட தாளங்கள் தடுமாறி தோற்றது!

Contest EntriesWhere stories live. Discover now