போட்டி 9 # 2 அழகிய காதல்

74 12 9
                                    

குழு அ (ஒரு பெண்ணின் கண்ணனோட்டத்தில்):

பயணம்:

திருமணத்திற்கு முன்:

மனதில் ஒழித்து வைத்த காதல் அழகு

சின்ன சின்ன சண்டை அழகு

காலை என் மொபைலில் உன் பெயர் அழகு

தனிமையில் உன் நினைவுகள் அழகு

தீராத கனவு அழகு

கை விடாமல் நீ நடந்தது அழகு

என் கோவத்தை கரைக்கும் உன் சிரிப்பு அழகு

இது நம் அழகிய தொடக்கம்

இருப்பேன் இறுதிவரை

திருமணத்திற்குப் பின்:

போர்வைக்குள் மறைந்த காதல் அழகு

சின்ன சின்ன அணைப்பு அழகு

காலை என் கன்னத்தில் உன் முத்தம் அழகு

தணிமையில் உன் பேச்சு அழகு

தீராத வெட்கம் அழகு

கையோடு கைப்பின்னி நீ உறங்கியது அழகு

என் கோவத்தை கரைக்கும் உன் வெட்கம் அழகு

இன்னும் பல தூரம் செல்ல வேணும் உன்னுடன்

இந்த அழகிய பயணத்தில்

______________________________________________________________

குழு க (ஒரு ஆணின் கண்ணனோட்டத்தில்):

திருமணத்திற்கு முன்:

மனதெனும் கடலில் காதலை ஒழித்து வைத்தேன் அதில் நீ மூழ்கி முத்தெடுக்க...

சின்னச் சின்ன சண்டையிட்டேன் செல்லக் கோபம் கொண்டு எனை நீ தீண்டிடவே...

நீ துயில் எழுமுன் குறுஞ்செய்திகள் பல நான் அனுப்பிடுவேன் புன்சிரிப்புடன் நீ கண் விழித்திடவே...

தனிமையிலும் என் நினைவுகளாய் நான் என்றும் உன்னோடு தானிருப்பேன்...

கனவிலும் உன்னை கலங்க விடாது காதல் செய்திடுவேன்...

தொலைதூரம் நாம் நடந்தாலும் உன் கரம் பற்றிட ஒருபோதும் நான் மறவேன்...

கோபம் கொண்டு செர்ரி பழமாய் சிவந்த உன் முகத்தை சிரிப்பால் நானும் மலர வைப்பேன்.

உன் மேல் கொண்ட நேசம் - அது
பூவை மிஞ்சும் வாசம்
உயிருள்ள வரை என்றும் வீசும்.

திருமணத்திற்குப் பின்:

புலராத பொழுதில் நாம் போர்வைக்குள்ளே தேடிய காதல்..

சின்னச் சின்ன அரவணைப்பில்
சிக்கிக் கொண்ட தேகம்..

என் முத்தம் அதில் நித்தம் - மழையில்
குளித்திடுமே உன் கன்னம்...

மயக்கும் என் பேச்சில் தோற்றிடும் உந்தன் தனிமையின் தயக்கம்...

நீ கண் கொண்டு என் கண் நோக்க மிகுந்திடும் என் வெட்கம்...

உறங்கிய போதும் மறவாதே உன் கரம் பற்றிடும் என் பழக்கம்...

உன் கோபம் அதை வென்றிடும் ஆயுதமோ என் வெட்கம்...

இன்னல் பல வந்தாலும் இடியே கூட விழுந்தாலும் இனிதே தொடரும் நம் பயணம்...

Contest EntriesWhere stories live. Discover now