போட்டி #12 - 02. கொடைக்கானல் சுற்றுலா

145 12 10
                                    

நண்பர்களுடன் கொடைக்கானல் சுற்றுலா. அதுகும் காரில் என்றால் எந்த இளைஞனும் மகிழ்ச்சியில் துளிகுதிப்பான். இக்கதையில் வரும் நண்பர்கள் அதற்கு பொருந்துவார்கள். படிக்கிற வயதை தாண்டிய பிறகு மனம் முதலில் தேடுவது தனிமை மற்றும் சுதந்திரம்.

இவர்கள் யாரும் கொடைக்கானலை காணாதவர்கள் இல்லை. தங்கள் குடும்பத்துடன் வந்தவர்கள் தான். குடும்பத்துடன் ஒரு வாடகை பேருந்தில் அமர்ந்தவாறே இயற்கை அழகை அவர்கள் குடும்பத்தினரின் வாந்தி வாசனையை ஒடுக்கிவிட்டு ரசிக்க வேண்டும்

ஆனால் நண்பர்களுடன் இந்த கார் பயணத்தில் 'மாஸ்க்கார போடு மயகிரிய', 'ஜிங்கி ஜிங்கி' என்று குடும்பத்துக்கு கேட்க முடியா பாடல்களை சத்தமாக கேட்டு அதே நேரத்தில் அதற்கு நடனம் ஆடிக்கொண்டே வருவது எவ்வளவு இனிமை

குடும்பத்துடன் வரும் போது இயற்கை அழகான அனுபவமாக இருந்தது என்றால் இப்பொழுது நண்பர்களுடனான ஆட்டம் அதை விட இனிமையானது.

கொடைக்கானலுக்கு எல்லாரும் செல்லும் இடங்களுக்கு சென்ற பிறகு கொடைக்கானல் ஏரி அருகில் கார் நிறுத்திவிட்டு உட்கார்தார்கள். வெளியில் மழை பெய்து கொண்டு இருந்தது இருந்த ஒரே குடையை எடுத்துக்கு கொண்டு நண்பர்கள் ஒரு ஒருவராக நடந்துவிட்டு வந்தனர்.

கடைசியாக சென்ற ராகவ் மட்டும் சோகமாக வந்ததை கண்ட நண்பர்கள் கேட்ட பொழுது அவன் சொன்னது, "நான் தனியா நடந்த இந்த பாதையில் என் நிவேதிதாவுடன் சென்றால் என்று நினைதேன்?"

ஒரு சிரிப்புடனே சபீர் சொன்னான், "திருத்தம், இப்பொழுது அவள் விஜயப்ரஸாடின் நிவேதிதா. அவளை அடைய நீ அவன் உதவியை நாடினாய். உன் பணத்திலேயே அவன் அவளுக்கு பரிசுகள் வாங்கி அவளை அவனுடையது ஆக்கினான் பின்பு இப்ப என்ன என்னுடைய நிவேதிதா."

ரமேஷ், "உனக்கு  என்ன? எங்களுக்கு தான் காதல் வலி தெரியும்"

சபீர் அதுக்கும் ஒரு பதில் வைத்திருந்தான், "அவன் காதல் கதை சிரிப்பு என்றால் உன்னுடைய கதை மிக சிரிப்பு. உன் ஆளு உனக்கு புடித்த நடிகை யாரு என்று கேட்டால் சன்னி லியோன் சொல்லி இருக்க"

Contest EntriesWhere stories live. Discover now