போட்டி 12 # 3 காதல் கண்கட்டுதே...💓

47 9 23
                                    

காஞ்சி மலர்கள் பூத்து அழகிய வண்ணம் மரத்தின் மேல் இருந்து தொங்க. அதனடியில் ரோஜா மலர்கள் மலர்ந்தது அழகாய் அமர்ந்து அங்கு வருபவர்களை வேடிக்கை பார்த்துக்க கொண்டிருந்தது. வேப்ப மரத்தின் குளிர் காற்று கோவிலுக்கு என்று இருக்கும் பத்தி சாம்பிராணி சந்தனதின் நறுமணத்தில் சேர்ந்து சுழன்று கொண்டு இருந்த்தது. அரசமரதடி பிள்ளையார் அமர்களமாய் அமர்ந்து தீபங்களின் ஒளியில் ஜொலித்து கொண்டு இருந்தார். வெள்ளிக்கிழமை கோவிலில் கூட்டம் அலை மோதியது.

எறும்பு எங்கு சென்றாலும் நேர் வரிசையாகச் செல்லும். ஆனால் இங்கு அப்படி எதிர் பாக்க முடியுமா! ஒரே நெரிசல் தேனீ கூட்டமாக மொயித்தனர் பிரசாதம் குடுக்கும் இடத்தில்.

சிவப்பு சட்டை வெள்ள வேஷ்டி அணிந்து சந்தன நெற்றியுடன் அவன் தாய் ராஜியின் கட்டளையால் அனைவருக்கும் பிரசாதத்தை வழங்கி கொண்டு இருந்தான் விக்னேஷ்.

விக்னேஷ் அம்மாவின் ஒரே செல்ல பையன். தோழி தோழர்கள் என்று பெரிய கூட்டம் உண்டு. அம்மா சொல்லும் பொண்ணை தான் கல்யாணம் பணிகிடனும் என்று கொள்கைக் கொண்டவன். ரொம்ப நல்ல பையன் தான நினைக்கிறீங்க. அது தான் தவறு நல்ல பையன் தான் ஆனால் சரியான ஜொள்ளு பார்ட்டி . ஆனால் எதையும் ஒரு அளவாகவே வைத்துக் கொள்வான். இவன் யாரையாவது விரும்புகிறான் என்று கூறினால், எந்த பொன்னாக இருந்தாலும் சிரித்து விடும். அப்படி ஜொள்ளு விடுவான். எப்போதும் சிரித்த முகம் ,எல்லோரையும் சிரிக்க வைக்கணும் என்கிற எண்ணம் கொண்டவன். இயற்கையிலையே வசீகரமான தோற்றம். நல்ல உத்யோகத்தில் இருக்கிறான்.

பச்சை தாவணியில் மதுரை மீனாக்ஷி போல் கோவிலை வலம் வரும் பேரழகி என்று கூறலாம். கோழிக்குண்டு கண்ணு, சின்ன வைரக் கல்லில் மூக்குத்தி கொண்ட மூக்கு திமிரான பார்வை அளவாக சிரிக்கும் உதடு குங்குமம் நிறைந்த நெற்றி. அழகு என்றால் அப்படி ஒரு அழகு. அழகே பொறாமை படும் பேரழகு.

படித்தது நல்ல பெயர் கொண்ட பெரிய கல்லுரியில். சராசரியாக படிப்பாள். புதுமையின் புதல்வி என்று சொல்லலாம். புதுமையை வரவேர்த்தும் கலாச்சாரங்களையும் பின்பற்றுவத்திலும் கவனம் செலுத்துபவள். தாத்தாவின் சுட்டிப் பேத்தி. தாத்தா வீட்டில் இருந்து வந்தால் தாவணியில் மின்னுவாள். கல்லூரியில் இருந்தால் நவ நாகரியத்தில் திகழ்வாள்.

Contest EntriesWhere stories live. Discover now