போட்டி#3. 4 - அமு(மிழ்)தம்

109 14 4
                                    


ரேஷ்மி ஓர் இளம் விஞ்ஞானி. உலக விஞ்ஞானிகளிள் முதல் 50 பெயர்களில் ஒருவராக வந்து தாய் நாடான இந்தியாவிற்கு பெருமைச் சேர்த்தவள்.

சிறு வயதில் பெற்றோரை இழந்தவள், பாட்டியின் புராண கதைகளைக் கேட்டு வளர்ந்தாள். அக்கதைகள் அவள் மனதை ஈர்த்தது. பள்ளிக்கு சென்றப் பிறகு அறிவியலின் மீது காதல் கொண்டாள். காதலனை மணக்க விஞ்ஞானியாக வேண்டுமென்று முடிவெடுத்து, அந்த இலட்சியத்தையும் அடைந்தாள்.

அனாலும் அவள் மனது ஏதோ ஒன்றை பரிக் கொடுத்தது போலவே இருந்தது. அதனால் மனம் ஈர்த்த ஒன்றை உண்மையாக்க காதலனின் அறிவை பயன்படுத்த முடிவெடுத்தாள்.கடந்த இரண்டு வருடமாக அமுதமென்னும் புதிய மருந்தை கண்டுப்பிடிக்க முடிவெடுத்து, தீவிரமாக அதற்காக உழைத்தாள். அமுதமென்னும் மருந்து மரபு அணுக்களை மாற்றி இளமையை தக்க வைக்கக் கூடியவொன்று.

அவளது துறையில் அவளுக்கு அமுதனென்ற தோழனும் இருந்தான். பெற்றோரில்லாத ரேஷ்மி அமுதனின் பாச மழையால் ஈர்க்கப்பட்டு அவளுக்கே தெரியாமல், அவன்பால் காதலில் விழுந்தாள்.

என்றும் போல், அன்றும் ரேஷ்மியும் அமுதனும் அலுவலகத்தில் இருக்கும் சிற்றுண்டயிலில் சந்தித்தார்கள். ஆனால் என்றும் ரேஷ்மி இதழில் இருக்கும் புன்னைகை இல்லாததை கவனித்த அமுதன் ரேஷ்மியிடம்,

"என்னவாயிற்று ரேஷ்மி? ஏன் சோகமாய் இருக்கின்றாய்?" என்றான்

"எனது புது கண்டுபிடிப்பில் ஒரு சிறிய தவறு. அதில்..." என்று அவள் மறுமொழி கூறி கொண்டிருக்கையில் ஒலிபெருக்கியில் (speaker) ரேஷ்மி அவர்களை அலுவலக தலைமையாளர் அழைக்கின்றார் என்று ஒலித்தது.இதனை கேட்ட ரேஷ்மி, அமுதனிடம்,

"நான் அவரை சந்திக்க வேண்டும் என்பதை மறந்து விட்டேன். அவரை சந்தித்து வர மாலை 4 மணியாகும், அப்பொழுது பேசலாம்" என்று அமுதனிடம் கூறி விடைப்பெற்று சென்றாள்.

அப்பொழுது அமுதனுக்கு தன் தோழன் ராகேஷ் சொன்னது நினைவுக்கு வந்தது,

Contest EntriesWhere stories live. Discover now