போட்டி 9 # 5 காலம் கடந்த காதல்

49 9 5
                                    

குழு அ (ஒரு பெண்ணின் கண்ணனோட்டத்தில்):

திருமணத்திற்கு முன்:

தெளிந்த வானாய் இருந்த என்னுள் சிறுமுகிலாய் நுழைந்தாயடா..!

சிறுக சிறுக உன் நினைவுகளால் என்னுள் வெண்மையான மேகங்களாய் படர்ந்தாயடா..!

படபடவென பேசும் என் உதடுகள்
உன்முன் மொழி மறந்து தவிக்கிறதே...
தன் இணையோடு சேர துடிக்கிறதே...

உன் குறும்புகளால் பொய் கோபம் கொள்ளும் என்னை...
சிறுபுன்னகையால் மயங்கும் மன்மதனே...!

தீண்டாமல் தீண்டி என் தேகம் சிலிர்க்க செய்யும் என் கள்ளவனே..!

உன் கரம்பிடித்து உன்னவள் என்ற பெயர் கொள்ளும் நாளிற்காக காத்திருக்கிறேன்...!

திருமணத்திற்குப் பின்:

நாட்கள் நாழிகையில் கடந்திட...
காதல் என்னும் தாரகமந்திரத்தால் கல்யாண பந்தத்தில் இணைந்தோமடா..!

காதலர்களாய் காதலை பகிர்ந்த நாம்...
காயங்களையும் பகிர்ந்தோமடா..!

உன் கண்ணில் என் கனவுகளும்
என் உயிரில்
உன் சுவடுகளும் கொண்டு இருவர் ஒருவரானோமடா..

காதல் நினைவுகள் என்னும் பூக்களால், நம் வாழ்க்கை என்னும் தோட்டத்தை அலங்கரிக்க அதில் முட்களும் அழகானதடா..!

கல்யணத்திற்குபின் காதலும் கரையும் என்பதை உடைத்து
பிறைநிலவாய் இருந்த என்னை முழுமதியாக செய்தாயடா..!

_____________________________________________

குழு க (ஒரு ஆணின் கண்ணனோட்டத்தில்):

திருமணத்திற்கு முன்:

வறண்ட பூமிப் போலிருந்த என் வாழ்க்கையில் மழையாய் நுழைந்து,
வசந்த காற்றை வீசிய தேவதையே...!

சுவாசிக்கும் காற்றைப் போல் என்னுள் நுழைந்து என் உயிருக்குள் சங்கமித்த பெண்னே...!

காளையைப் போல் கட்டுக் கொள்ளாமல் துடித்துக் கொண்டிருந்த என் இதயத்தை உன் கடை கண்களால் கட்டுப் படுத்திய பைங்கிளியே...!

கற்களைப் போலிருந்த என் மனதை, உன் இதழின் சிறு புண்ணகையால் பஞ்சைப் போல் மாற்றிய இயற்க்கை தாயே...!

காற்றில் அலையாய் அடிக்கும் உன் கரங்களை தீண்ட, என் கரங்களுக்கு என்று வரம் தருவயோ, கடலரசியே....!

தனித்து துடித்து கொண்டு இருக்கும் என் இதயம் உன் இதயத்தோடு சேர்ந்து துடிக்க ஏங்குதடி, என் இதயக்கண்ணியே....!

திருமணத்திற்குப் பின்:

என் இதயம் உன் இதயத்தோடு சேர்ந்த அந்த ஒரு நொடி சொர்க்கத்திற்கு சென்றேனடி...!

வாழ்க்கை என்னும் கடலில் எதிர் நீச்சல் இட்டு முழுகும் வேலையில் துடுப்பாய் இருத்தவளே...!

என் கனுவுகள் உயிர் பெற மெழுகாய் இருந்த தேவதையே, உன் ஆசையை என் ஆசையாய் கொள்வேனடி என் தலைவியே....!

காதல் என்னும் மழையால் நம் வறண்ட வாழ்க்கையும் சொற்கமாய் மாற்றிய என் பாரியே....!

பொன்னும் பொருளும், இளமையும் முதுமையும், தாண்டிய ஒன்று தான் காதலென்று இந்த தோல் சுருங்கிய கிழவனுக்கு உணர்த்திய என் காதல் தேவியே.....!

Contest EntriesWhere stories live. Discover now