போட்டி 6 # 2- தேவகியின் தாரக மந்திரம்

90 12 14
                                    

என்ன தான் கல், மண் கொண்டு இழைத்து ஒரு வீட்டை கட்டினாலும், அதனை அழகாக மாற்றுவது குழந்தைகளின் மழலை பேச்சுக்களும் அவர்கள் உதிர்க்கும் முத்து போன்ற சிரிப்புகளும் தான். அதனை என்றுமே நாம் ரசிக்க வேண்டுமே தவிர, ஓரு போதும் அலட்சியப்படுத்திவிட கூடாது. சிறு வயதில் நாம் குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட மகிழ்ச்சியை தருகிறோமோ, அதுவே எதிர்காலத்தில் அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி இருளை விட்டு விலகி வெளிச்சத்தை அடைய உதவி செய்கிறது. 

தனிக்குடும்பத்தை விட கூட்டுக்குடும்பமே என்றும் அழகான ஒன்று. ஆனால், இந்த காலக்கட்டத்தில் அது குறைந்து போனதே பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில் சஞ்சரிக்க காரணமாகிவிட்டது. அன்று குழந்தைகள், பாட்டி சொல்லும் கதை கேட்டு வளர்ந்தனர். ஆனால், இன்றோ! அதே கதையினை நாம் தொலைக்காட்சியின் உதவியுடன் தெரிந்துக்கொள்ள ஆசை கொள்கிறோம். நாம் பார்க்கும் தொலைக்காட்சி என்ன கூட்டு குடும்பத்தை விட முக்கியம் ஆகிவிட்டதா என்ன!
மாடர்ன் சிட்டியில் பிறந்த ஒரு குழந்தை, தன் பாட்டியின் கதைக்கேட்டு சாதனையாளராக எதிர்காலத்தில் மாறத்துடிக்கும் ஒரு கதை தான் இது. 

அந்த குழந்தைக்கு வயது 3, வீட்டை சுற்றிலும் இருக்கும் பொருள்களை பார்த்தவுடன் அந்த சிசுவின் முகத்தில் ஒரு புன்முறுவல் பூத்து குலுங்கியது. ஷிவா குட்டி என்று அருகில் அமர்ந்திருந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவள் ஒருத்தி அந்த குழந்தையை கொஞ்சிக்கொண்டிருந்தாள். 

செல்லம்!! என்னடா, உன் அப்பா சம்பாதிச்ச பொருளையெல்லாம் வேடிக்கை பார்க்கிறாயா என்று அந்த பிஞ்சு கைகளை தடவிக்கொண்டிருந்தாள். அதுவோ இவள் வாயசைவுகளை நோக்கி ஏறிட்டு பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது. 

எவ்வளவு பேர் மழலை அழகை ரசித்தாலும், அது தாத்தா பாட்டி ரசிக்கும் அளவுக்கு ஒரு போதும் வருவதேயில்லை. அந்த பாட்டியின் வாயசைவுகளை கவனித்த அந்த குழந்தை சிரித்துக்கொண்டிருக்க, தூக்கம் அவனை ஆள முன் வந்தது. 

Contest EntriesWhere stories live. Discover now